தலைச்சேரிக் கோட்டை
கேரளக் கோட்டை From Wikipedia, the free encyclopedia
Remove ads
தலைச்சேரிக் கோட்டை, இந்திய மாநிலமான கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலைச்சேரி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மலபார் கரைப்பகுதியில் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதற்காகப் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் இக் கோட்டையை 1708 ஆம் ஆண்டில் திருவல்லப்பாடு என்ற குன்றின்மீது கட்டினர். 1781 ஆம் ஆண்டில் மைசூர் அரசின் ஆட்சியாளனாக இருந்த ஹைதர் அலி, தனது மலபாரைக் கைப்பற்றும் படை நடவடிக்கையின்போது இதனைக் கைப்பற்ற முயற்சி செய்தானாயினும் அவனுக்கு வெற்றி கிடைக்கவில்லை. அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான், மூன்றாவது ஆங்கிலேய-மராட்டியப் போர் முடிவுக்கு வந்த பின்னர், 1792 ஆம் ஆண்டில் மலபார் பகுதியை பிரித்தானியருக்கு விட்டுக் கொடுக்கவேண்டி ஏற்பட்டது.
பாரிய மதிற் சுவர்களையும், கடலுக்குச் செல்வதற்கான இரகசியச் சுரங்கங்களையும், நுணுக்கமான செதுக்கு வேலைப்பாடுகளோடு கூடிய பெரிய கதவுகளையும் கொண்டு சதுர வடிவானதாக இக் கோட்டை விளங்குகிறது. ஒரு காலத்தில் தலைச்சேரியின் வளர்ச்சியின் மையமாக விளங்கிய இக் கோட்டை இன்று ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாக உள்ளது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads