கண்ணூர் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்ணூர் மாவட்டம் (மலையாளம்: കണ്ണൂർ ജില്ല) இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் 14 மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். இதன் மாவட்டத் தலைநகரம் கண்ணனூர். இந்த நகரத்தின் பெயரைத் தழுவியே மாவட்டத்துக்குப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டத்துக்கு வடக்கில் காசர்கோடு மாவட்டமும், தெற்கில் கோழிக்கோடு மாவட்டமும் உள்ளன. கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது இது கர்நாடக மாநிலத்தில் எல்லையாகவும் உள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் மேற்கு எல்லை அரபிக் கடலால் வரையறுக்கப்படுகிறது.
கேரளாவில் அதிக நகராக்கம் பெற்ற மாவட்டம் கண்ணனூர் ஆகும். இங்கே 50%-இற்கும் அதிகமான மக்கள் நகரப்பகுதிகளில் வாழ்கின்றனர். இதன் நகர்ப்புற மக்கள்தொகை 16,40,986, இது எர்ணாகுளத்துக்கு அடுத்தபடியாக உள்ள மிகக்கூடிய தொகையாகும்.
இம்மாவட்டத்தின் எழிமலையில் ஆசியாவின் மிகப்பெரிய இந்தியக் கடற்படை கல்விக்கழகம் உள்ளது.[4]
Remove ads
ஆட்சிப் பிரிவுகள்
- சட்டமன்றத் தொகுதிகள்:[5]
- பய்யன்னூர் சட்டமன்றத் தொகுதி
- கல்லியாசேரி சட்டமன்றத் தொகுதி
- தளிப்பறம்பா சட்டமன்றத் தொகுதி
- இரிக்கூர் சட்டமன்றத் தொகுதி
- அழீக்கோடு சட்டமன்றத் தொகுதி
- தர்மடம் சட்டமன்றத் தொகுதி
- தலசேரி சட்டமன்றத் தொகுதி
- கூத்துப்பறம்பா சட்டமன்றத் தொகுதி
- மட்டன்னூர் சட்டமன்றத் தொகுதி
- பேராவூர் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads