தவநேந்திர வருமதேவன்

பாலி இராச்சியத்தின் மூன்றாம் அரசர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தவநேந்திர வருமதேவன் (ஆங்கிலம்: Tabanendra Warmadewa; இந்தோனேசியம்: Sang Ratu Aji Tabanendra Warmadewa; என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியில், மூன்றாம் அரசர் ஆவார்.[1] இவர் சக ஆண்டு: 877-889 அல்லது 955-967-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்தார்.

பாலி, மாணிக் லியூ கிராமத்தில் (Manik Liu village) கிடைக்கப் பெற்ற மூன்று கல்வெட்டுகளில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] பல கிராமங்களுக்கு வரி விலக்கு அளித்ததற்காகவும்; அர்ச்சகர்கள் சிலர், ஆயர் மடத்தில் தங்களின் தங்குமிடத்தைக் கட்ட அனுமதித்ததற்காகவும்; அந்தக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். ஆயர் மடம் (Air Madatu) என்பது இவருக்கும் முந்தைய மன்னர் செரி உக்கிரசேனன் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும்.[3]

பாலி கிந்தாமணி கிராமப் பகுதியில் (Kintamani village) இரண்டாவது கல்வெட்டு கிடைத்துள்ளது. இவரின் மனைவியின் பெயர் செரி சுபத்திரிகா தருமதேவி (Sri Subhadrika Dharmadewi).[2][4]

Remove ads

கல்வெட்டுகள்

பாலி இராச்சியம் தொடர்பான மூன்று கல்வெட்டுகளில் தவநேந்திர வருமதேவனின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.[5]

  • மாணிக் லியூ கல்வெட்டு 1 - (Manik Liu inscription) (சக ஆண்டு: 877)
  • கிந்தாமணி கல்வெட்டு 1 - (Kintamani inscription 1) (சக ஆண்டு: 889)
  • கிந்தாமணி கல்வெட்டு 2 - (Kintamani inscription 2) (சக ஆண்டு: 889)

அனைத்துக் கல்வெட்டுகளும் பாலினிய பழைய மொழியில் எழுதப்பட்டுள்ளன.[6][5][6][7]

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads