தாதாவு மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் பிந்துலு பிரிவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

தாதாவு மாவட்டம்map
Remove ads

தாதாவு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Tatau; ஆங்கிலம்: Tatau District; சீனம்: 右区) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பிந்துலு பிரிவில் ஒரு மாவட்டமாகும்.[1]

விரைவான உண்மைகள் தாதாவு மாவட்டம் Tatau DistrictDaerah Tatau, நாடு ...
Thumb
தாதாவு மாவட்டத்தின் வரைப்படம்

இதன் மொத்த பரப்பளவு 4,945.80 சதுர கி.மீ.; தலைநகரம் தாதாவு நகரம். மாவட்ட அலுவலகம் பிந்துலு நகரத்தில் உள்ளது.

Remove ads

வரலாறு

19-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், தாதாவு ஆற்றுப் பகுதி, புரூணை சுல்தானகத்தின் (Bruneian Empire) கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. 1861-ஆம் ஆண்டில், அந்தப் பகுதி வெள்ளை இராசா (Raj of Sarawak) ஜேம்சு புரூக்கிற்கு (James Brooke) வழங்கப்பட்டது. பின்னர் சரவாக் இராச்சியத்தின் (Sultanate of Sarawak) ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது.[2]

1800-ஆம் ஆண்டுகளில், சரவாக் நிலப்பகுதி புரூணை சுல்தானகத்திற்கு சொந்தமான ஒரு காலனியாக இருந்தது. 1946-ஆம் ஆண்டு சரவாக்கைப் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் வரையில் சரவாக் இராச்சியத்தை வெள்ளை இராசாக்கள் 95 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள்.[3]

ஜேம்சு புரூக் முதன்முதலில் போர்னியோ தீவிற்கு வந்தபோது, சரவாக் நிலப்பகுதி புருணை சுல்தானகத்தின் அடிமை மாநிலமாக இருந்தது. அரசாங்க அமைப்பு முறை புரூணை அரசாங்க நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்தது.[4]

Remove ads

இனக்குழுக்கள்

தாதாவு மாவட்டம் இபான், சீனர், மெலனாவ், மலாய் மற்றும் ஒராங் உலு மக்களின் தாயகமாக விளங்குகிறது. பெரும்பாலான இபான்கள் தாதாவு மாவட்டத்தின் கிராமப் புறங்களில் பரவி உள்ளனர்.

தாதாவு மாவட்டத்தின் தனித்துவமான ஓர் இனக்குழு உள்ளது. சரவாக்கில் வேறு எங்கும் இல்லை. அந்தக் குழுவின் பெயர் தாதாவு இனக்குழு ("Tatau People").

இபான் மக்கள்

இபான் மக்கள் தாதாவு நகரம் மற்றும் தாதாவு கிராமப்புறப் பகுதிகளில் மிகுதியாக உள்ளனர். மலாய் மக்களில் பலர் தொடக்கத்தில் தாதாவு பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இருப்பினும், உள்ளூர் மக்களுடன் குறிப்பாக மெலனாவு மக்களுடன் திருமணம் செய்து கொண்டது; மலாய் மக்களை தாதாவுவில் உள்ள முக்கிய இனங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளது.

சீனர் மக்கள் தாதாவு நகரில் அதிக அளவில் உள்ளனர். சிலர் கோலா தாதாவு (Kuala Tatau) மற்றும் சங்கான் (Sangan) கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். கென்னியா (Kenyah), காயான் (Kayan), தாதாவு (Tatau), பெனான் (Penan) மற்றும் புனான் (Punan) போன்ற ஒராங் உலு (Orang Ulu) இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் தாதாவு மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளனர்.[5]

கென்னியா மக்கள்

கென்னியா மக்களில் பெரும்பாலோர் நிங் (Ng), தாவு (Tau), கோலா பாக்கியாவு (Kuala Baggiau) மற்றும் சுங்கை அனாப் (Sungai Anap) போன்ற கிராமப் புறங்களின் உள்பகுதிகளில் வாழ்கின்றனர்.[6]

காட்டு மரங்கள் வெட்டுதல் மற்றும் காட்டு மரப் பொருள்கள் தொழில் காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.

மேலதிகத் தகவல்கள் மாவட்டம், மொத்த மக்கள் தொகை ...
Remove ads

சான்றுகள்

இவற்றையும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads