தாது மாவட்டம்

பாகிஸ்தானிலுள்ள சிந்து மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

தாது மாவட்டம்map
Remove ads

தாது மாவட்டம் (Dadu District) (Sindhi: دادو), (Urdu: دادو ) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் ஐதராபாத் கோட்டத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் தாது நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் தாது மாவட்டம் ضلعو دادو, நாடு ...
Remove ads

மாவட்ட நிர்வாகம்

19070 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாது மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக தாது வட்டம், ஜோகி வட்டம், காய்ர்பூர் நாதன் ஷா வட்டம், மெகர் வட்டம் மற்றும் தாது கிராமப்புற வட்டம் ஆறு வருவாய் வட்டங்களாகவும், எழுபத்தி எட்டு கிராம ஒன்றியக் குழுக்களாகவும், 523 வருவாய் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் நான்கு நகராட்சி மன்றங்களையும், ஒன்பது நகரப் பஞ்சாயத்துக் குழுக்களையும் கொண்டுள்ளது.

Remove ads

மக்கள் தொகையில்

1998ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி, 19070 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாது மாவட்டத்தின் மக்கள் தொகை 16,88,811 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கல் 8,87,061 (52.53 %) ஆகவும்; பெண்கள் 801750 (47.47 %) ஆகவும் உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் (1981 - 98) 2.65% ஆக உள்ளது. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 110.6 ஆண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 88.6 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 35.6% ஆகவுள்ளது. [2]

Remove ads

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads