ஐதராபாத் கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐதரபாத் கோட்டம் (Hyderabad Division), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் 6 கோட்டங்களில் ஒன்றாகும். ஐதராபாத் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஐதராபாத் நகரம் ஆகும். இக்கோட்டத்தில் 9 மாவட்டங்களும், 37 வருவாய் வட்டங்களும் உள்ளது. 1 சூலை 1970 அன்று நிறுவப்பட்ட இக்கோட்டத்தில் தட்டா மாவட்டம், படின் மாவட்டம், தாது மாவட்டம், ஐதராபாத் மாவட்டம், ஜாம்சோரோ மாவட்டம், மட்டியாரி மாவட்டம், சுஜாவால் மாவட்டம், தண்டோ அல்லாயார் மாவட்டம் மற்றும் தண்டோ முகமது கான் மாவட்டங்கள் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஐத்ராபாத் கோட்டத்தின் மக்கள் தொகை 11,657,249 (10.16 (மில்லியன்) ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 60,30,741 மற்றும் பெண்கள் 5,625,967 உள்ளனர்.
மொழிகள்
இக்கோட்டத்தில் சிந்தி மொழியை 83.36% மக்களும், உருது மொழியை 11.06% மக்களும், பஞ்சாபி மொழியை 1.71 மக்களும்,பஷ்தூ மொழியை 1.07% மக்களும், சராய்கி மொழியை 0.41% மக்களும், பலூச்சி மொழியை 0.67% மக்களும், இந்த்கோ மொழியை 0.70% மக்களும் மற்றும் பிற மொழிகளை 0.98% மக்களும் பேசுகின்றனர்.[1]
சமயங்கள்
இக்கோட்டத்தில் இசுலாம் சமயத்தை 90.67% மக்களும், இந்து சம்யத்தை 8.32% மக்களும், கிறித்துவம் உள்ளிட்ட பிற சமயங்களை 1.01% மக்களும் பின்பற்றுகின்றனர்.
Remove ads
மாவட்டங்களின் விவரம்
Remove ads
வருவாய் வட்டங்களின் பட்டியல்
தொகுதிகள்
ஐதராபாத் கோட்டத்தில் சிந்து மாகாணச் சட்டமன்றத்திற்கு 29 தொகுதிகளும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 13 தொகுதிகளும் கொண்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads