தாபோ உம்பெக்கி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாபோ முவுயெல்வா உம்பெக்கி (Thabo Mvuyelva Mbeki, பிறப்பு: ஜூன் 18, 1942) தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆவார். 14 வயதில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் படித்துள்ளார். 1994இல் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசு முடிவுக்கு வந்து நெல்சன் மண்டேலா குடியரசுத் தலைவர் பதவியில் ஏறும்பொழுது உம்பெக்கி துணைத் தலைவராக பதவியில் ஏறினார். 1999இல் உம்பெக்கி குடியரசுத் தலைவராக ஆனார்.
2008இல் செப்டம்பர் 20ஆம் தேதி ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி இவருக்கு ஆதரவு பின்வாங்கியுள்ளது. இதனால் உம்பெக்கி பதவி விலகுவதற்கு உடன்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads