தாமரலிங்கா
கி.பி. 10-ஆம்; 13-ஆம் நூற்றாண்டுகளில் தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளில் அமைந்து இருந்த அரசு. From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாமரலிங்கா அல்லது தாம்பிரலிங்கா என்பது (மலாய்: Tambralinga; ஆங்கிலம்: Tambralinga; சமசுகிருதம்: Tambralinga) கி.பி. 10-ஆம்; 13-ஆம் நூற்றாண்டுகளில் தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளில் அமைந்து இருந்த அரசு. சிறிது காலம் ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்தது. பின்னர் விடுபட்டுச் சுதந்திரமாக ஆட்சி செய்தது.

தாமரலிங்கா அரசு; தாய்லாந்தின் தென் பகுதியையும் ஆட்சி செய்து இருக்கிறது. ஆகக் கீழே துமாசிக் வரை அதன் ஆட்சி பரந்து விரிந்து இருக்கிறது. சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக்.
ஒரு காலக் கட்டத்தில் தாமரலிங்கா பேரரசு வரலாற்றில் இருந்து காணாமல் போய் விட்டது. தாமரலிங்கா எனும் ஓர் அரசு இருந்ததாகப் பலருக்கும் தெரியாமல் போனது. ஆனால் அண்மைய காலத்தில் தான் தாம்பிரலிங்கா பேரரசைப் பற்றிய உண்மைகள் தெரிய வந்து உள்ளன.[1]
Remove ads
வரலாறு

முன்பு காலத்தில் அதாவது 10-ஆம் நூற்றாண்டில் நாகர ஸ்ரீ தர்மராஜா (Nagara Sri Dharmaraja) அரசு எனும் ஓர் அரசு தாய்லாந்தை ஆட்சி செய்து இருக்கிறது.[2]
இந்த நாகர ஸ்ரீ தர்மராஜா அரசின் அப்போதைய அசல் பெயர் அதே நாகர ஸ்ரீ தர்மராஜா தான். ஆனால் அந்த அரசின் இப்போதைய பெயர் நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat).[3]
நாகர ஸ்ரீ தர்மராஜா
இப்போதைய தாய்லாந்து வரலாற்றில் நாகர ஸ்ரீ தர்மராஜா எனும் பழைய பெயர் இல்லை. நாக்கோன் சி தாமராட் எனும் புதுப் பெயர் தான் இருக்கிறது. அந்தப் பெயரில் தான் அழைக்கப் படுகிறது. தாய்லாந்து பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் சொல்லப் படுகிறது.
தாமரலிங்காவின் முக்கியமான அரசர்களில் ஒருவர் சந்திரபானு ஸ்ரீதர்மராஜா. அவருடைய பெயரில் இருந்த பேரரசின் பெயர் நாக்கோன் சி தாமராட் என்று மாற்றம் கண்டது. தாய்லாந்து மொழியில் தாமராட் என்றால் தாமரை.[4]
நாகோன் சி தாமராட்டிற்கு அருகில் சாயா (Chaiya) எனும் இடத்தில் ஊவா வியெங் (Hua-wieng temple) கோயிலில் கல்வெட்டு எண். 24 எனும் கல்வெட்டைக் கண்டு எடுத்தார்கள். அந்தக் கல்வெட்டில் தாமரலிங்கத்தின் ஆட்சியாளர் சந்திரபானு ஸ்ரீதாமராஜா (Chandrabhanu Sridhamaraja) என்றும்; அவர் பத்ம வம்சத்தின் (தாமரை வம்சம்) மன்னர் என்றும் பொறிக்கப்பட்டு உள்ளது.[5]:184
Remove ads
சந்திரபானு ஸ்ரீதர்மராஜா
சந்திரபானு ஸ்ரீதர்மராஜா கி.பி.1230-ஆம் ஆண்டில் இருந்து 1263-ஆம் ஆண்டு வரை தாம்பிரலிங்கா பேரரசை ஆட்சி செய்தவர். தென் தாய்லாந்தில் ஒரு புத்தர் ஆலயம் உள்ளது. அதன் பெயர் போரோமாத்து ஆலயம் (Phrae Boromadhatu).
இந்தக் ஆலயத்தைக் கட்டியதால், சந்திரபானு உலகம் முழுமையும் இப்போது நன்கு அறியப் படுகிறார். அத்துடன் புத்த உலக வரலாற்றில் பெயர் பெற்றும் விளங்குகிறார்.
இவர் சில ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்தும் இருக்கிறார். அந்த வகையிலும் இவர் அறியப் படுகிறார். இலங்கையின் மீது தொடர்ந்து 30 ஆண்டுகள் போர் தொடுத்தார்.[5]:185
நாக்கோன் சி தாமராட்

இந்த நாக்கோன் சி தாமராட் எனும் நாகர ஸ்ரீ தர்மராஜா அரசின் முன்னைய பெயர் தான் தாமிரலிங்கா பேரரசு. முதன்முதலாக தாமரலிங்கா என்று அழைத்து இருக்கிறார்கள். அதன் பின்னர் நாகர ஸ்ரீ தர்மராஜா என்று அழைத்து இருக்கிறார்கள்.
அதன் பின்னர் நாக்கோன் சி தாமராட் என்று அழைத்து இருக்கிறார்கள். இப்போதும் அழைத்து வருகிறார்கள். 12-ஆம் நூற்றாண்டில் இந்தத் தாமிரலிங்கா பேரரசு தான் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் வந்தது.
சீனா தாங் வம்சாவழி காலச் சுவடுகள்
கி.பி.600-ஆம் ஆண்டுகளில் தாங் வம்சாவழியினர் (Tang dynasty) சீனாவை ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது 616-ஆம் ஆண்டு காவ் சூ (Emperor Gaozu) எனும் அரசர் சீனாவை ஆட்சி செய்து இருக்கிறார்.
இவர் ஆட்சி செய்யும் போது தாமரலிங்கா அரசு சீனாவிற்குப் பாதுகாப்புக் காப்பீடு வழங்கி உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் கப்பம் கட்டி இருக்கிறது.
தாமரலிங்கா என்றால் என்ன என்றும் சீனக் காலச் சுவடுகள் விளக்கம் கொடுத்து இருக்கின்றன. அவை தாங் வம்சாவளிக் காலச்சுவடுகள்; மிங் (Ming dynasty) வம்சாவளிக் காலச் சுவடுகளில் காணப்படுகின்றன.
Remove ads
தாமரலிங்கம்

கி.பி.640; கி.பி.648; கி.பி.818; கி.பி.860; கி.பி.873-ஆம் ஆண்டுகளில் தாமரலிங்கா அரசர்கள் சீனாவிடம் கப்பம் கட்டி இருக்கிறார்கள்.[6] அந்தச் சுவடுகளின்படி தாமரலிங்கம் என்பது ஒரு சமசுகிருதச் சொல். தாமரை எனும் சொல்லும் லிங்கம் எனும் சொல்லும் இணைந்து வருகிறது.
இந்தத் தாமிரலிங்கா அரசைத் தாமரலிங்கா அர்சு என்றும் சொல்வார்கள். தாம்பிரம் என்றால் செம்பு. இது சிவப்பு நிறத்தையும் குறிக்கும். லிங்கா என்றால் இந்துக்களின் சின்னம். சிவபெருமானைக் குறிக்கும் ஒரு தெய்வீகத் தன்மை என்று அந்தச் சுவடுகள் சொல்கின்றன.[7][8]
தாமரலிங்காவைப் பற்றி சீன வரலாற்று ஆசிரியர்கள்
1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரை சீனாவை மிங் அரசர்கள் (Ming dynasty) ஆட்சி செய்தார்கள். இவர்களின் காலத்தில் தான் சீன வரலாறு ஓரளவிற்கு முழுமையாக எழுதப் பட்டது.
அப்படி எழுதப்பட்ட வரலாற்றில் தான் தென்கிழக்காசிய வரலாற்றுப் பதிவுகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சூ கோசென் (Zhu Guozhen); ஊ இங்லின் (Hu Yinglin), இன் சிங் (Yǐn Qìng) போன்ற சீன வரலாற்று ஆசிரியர்கள்.
அந்தப் பதிவுகளில் தாமரலிங்காவைப் பற்றி அந்தச் சமயத்தில் அவர்கள் கேட்டதை; அவர்கள் பார்த்ததை எல்லாம் பதிவு செய்து இருக்கிறார்கள்.[9]
சான்போகி தாம்பிரலிங்கராத்
தாமரலிங்கா அரசு ஒரு காலக் கட்டத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்து இருக்கிறது. ஸ்ரீ விஜய பேரரசைச் சீனர்கள் சான்போகி (Sanfoqi) என்று அழைத்து இருக்கிறார்கள்.
தாமரலிங்கா அரசு தீபகற்ப மலாயாவின் மத்தியப் பகுதியை ஆட்சி செய்து வந்து இருக்கிறது. இந்தத் தீபகற்ப மலாயாவின் மத்தியப் பகுதி தான் இப்போதைய தென் தாய்லாந்து ஆகும்.
மலாயாவுக்கு வந்த இலங்கை வணிகர்கள் தாமரலிங்காவைச் சாவகம் (Savaka) என்று அழைத்து இருக்கிறார்கள். அராபிய வணிகர்கள் சபாஜ் (Zabaj) என்றும் சபாக்கா (Zabaka) என்றும் அழைத்து இருக்கிறார்கள்.
தென்னிந்திய வணிகர்கள் தாமரலிங்கம் (Tambralingam) என்றும் வட இந்திய வணிகர்கள் தாம்பிரலிங்கராத் (Tambralingarath) என்றும் அழைத்து இருக்கிறார்கள். பாரசீக மொழியில் ராத் என்றால் நாடு.
தக்கோலா துறைமுகம்
தாமரலிங்கா அரசின் தலைப் பட்டணமாகத் தக்கோலா துறைமுகம் இருந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து கூறுகின்றனர்.
தக்கோலா துறைமுகத்தில் தென்னிந்தியாவின் கலிங்கத்தைச் சேர்ந்த தமிழர்கள் அதிகமாகக் குடியேறியதாகவும் அகழாய்வுச் சான்றுகள் கூறுகின்றன.[10]
இந்தப் பேரரசைப் பற்றிய கல்வெட்டுகள் அல்லது அகழ்வாய்வுகள் எதுவும் அதிகமாகக் கிடைக்கவில்லை. சீன வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அப்படி ஓர் அரசு இருந்ததாக வரலாறும் சொல்கிறது.
1365-ஆண்டு, தாமரலிங்கா அரசு, ஜாவாவில் இருந்த மஜாபாகித் பேரரசின் கீழ் வந்தது. அதன் பின்னர் நக்கோன் சி தம்மரத் அரசு (Nakhon Si Thammarat Kingdom) என பெயர் மாற்றம் கண்டது. தாய்லாந்து நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.
Remove ads
மேலும் படிக்க
- Sumio Fukami (2004). "The Long 13th Century of Tambralinga: From Javaka to Siam". The Memoirs of the Research Department of the Toyo Bunko 62: 45–79.
- Michel Jacq-Hergoualc'h (2002). "The Situation in the Malay Peninsula in the 10th and 11th Centuries" and "The Commercial Boom in the Malay Peninsula in the 12th and 13th Centuries". The Malay Peninsula: Crossroads of the Maritime Silk-Road (100 BC–1300 AD). Brill. pp. 339–442.
- O. W. Wolters (1958). "Tāmbraliṅga". Bulletin of the School of Oriental and African Studies 21 (3): 587–607. doi:10.1017/S0041977X00060195.; also printed in Vladimir Braginsky, ed. (2002). Classical Civilisations of South East Asia. Routledge Curzon. pp. 84–105.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads