தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு

From Wikipedia, the free encyclopedia

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு
Remove ads

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு (Nelum Pokuna Mahinda Rajapaksa Theatre)[3] (தாமரைத் தடாக அரங்கு என பொதுவாக அழைக்கப்படுவது; முன்பு தேசிய இசையரங்கு கலைகள் அரங்கு என அழைக்கப்பட்டது) என்பது கொழும்பிலுள்ள இசையரங்கு கலைகள் நிலையம். இது 15 திசம்பர் 2011 அன்று திறந்து வைக்கப்பட்டது[4]

விரைவான உண்மைகள் தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு, முகவரி ...

இதன் அமைப்புப் பணிக்கு சீன அரசாங்கத்தினால் 2,430 மில்லியன் ரூபாவும் ஏனைய நிதி நிறுவனங்கள் மூலம் 650 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. சீனாவின் யங்யுவான் என்ற நிறுவனம் கட்டிட அமைப்பு வேலையைப் பொறுப்பேற்று 2008ம் ஆண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்தது.

தாமரை மலரின் வடிவில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கலையரங்கு மூன்று அரங்க மாடிகளைக் கொண்டதுடன், 1288 சொகுசு இருக்கைகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் 70 கலைஞர்கள் வரையில் மேடையேற்றக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மேடையேற்றக்கூடிய 4 மேடைகள் 690 சதுர மீற்றரில் அமைக்கப்பட்டுள்ளன.

Remove ads

பராக்கிரமபாகு மன்னனின் தாமரைத்தடாகம்

பாராக்கிரமபாகு மன்னனால் பொலனறுவைக் காலத்தில் கட்டப்பட்ட தாமரைத்தடாகத்தின் வடிவத்தை ஒத்ததாக இத் தாமரைத் தடாகக் கலையரங்கு காணப்படுகின்றது. பராக்கிரமபாகு மன்னனின் தாமரைத்தடாகம் கருங்கற்பாறைகளால் பொழியப்பட்டு கட்டப்பட்டது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads