தாமரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாமரை (lotus), ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும்.
தாமரை செடிகள் மெதுவாக நகரும் ஆறுகள் மற்றும் வெள்ள சமவெளி பகுதிகளில் வளர ஏற்றது. தாமரை செடிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விதைகளை நீர்நிலைகளில் இடுகின்றன. இவற்றில் சில விதைகள் மட்டுமே உடனடியாக துளிர்விடுகின்றன. பெரும்பாலானவை வனவிலங்குகளால் உண்ணப்படுகின்றன, மீதமுள்ள விதைகள் நீர் நிலைகள் வரைந்தாலும் நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் அப்படியே இருக்கும். மீண்டும் தண்ணீர் வரும் போது இந்த விதைகள் துளிர்விடுகின்றன. சாதகமான சூழ்நிலையில், இந்த விதைகள் பல ஆண்டுகள் வரை இருக்கும். சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தாமரை விதை பின்னர் முளைத்துள்ளது.
இது இந்தியாவில் இருந்து தெற்கு இமயமலைப் பகுதிகள், வடக்கு சீனா, கிழக்கு ஆசியா மற்றும் உருசியா வரை காணப்படுகின்றது.[1][2] இன்று, இந்த இனம் தென்னிந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா, நியூ கினியா மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு ஆத்திரேலியா முழுவதிலும் காணப்படுகிறது.[2] இது உண்ணக்கூடிய விதைகளுக்காக பயிரிடப்படுகின்றது. இது ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்படுகிறது.[1] இது இந்தியா மற்றும் வியட்நாமின் தேசிய மலராகும் .
தாமரைப்பூவானது பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. பண்டைய இந்தியப் புராணங்களிலும் பழங்கால இந்திய மருந்து வகைகளிலும் தாமரை இடம் பிடித்துள்ளது.
Remove ads
சொற்பிறப்பு
தேவநேயப் பாவாணர், தும் - துமர் - தமர் - தமரை - தாமரை என்று இச்சொல் பிறந்ததாகக் கூறுகிறார். தும் என்பது சிவந்தவற்றோடு தொடர்புபட்ட சொல்மூலம். ஆகையால், தாமரை எனும் சொல் செம்முளரியைக் குறிக்கும் என்றும் அது இன்று தன் சிறப்புப் பொருள் இழந்து எந்த நிறத்தாமரைப்பூவையும் குறிக்குமாறு பொதுப் பொருளில் வழங்குகின்றது என்றும் கூறுகிறார்.[3]
தாவரவியல்
செடி

இது ஒரு நீர்த்தாவரம் என்பதால் எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே காணப்படும். தாமரை செடிகள் மெதுவாக நகரும் ஆறுகள் மற்றும் வெள்ள சமவெளி பகுதிகளில் வளர ஏற்றது. தாமரை வேர்கள் குளம் அல்லது ஆற்றின் அடிப்பகுதி மண்ணில் நடப்படுகின்றன, அதே சமயம் இலைகள் நீரின் மேற்பரப்பில் மிதக்கும். இலைத் தண்டுகள் (இலைக்காம்புகள்) இரண்டு மீட்டர் வரை நீளமாக இருக்கும், அந்த ஆழம் வரை செடியை தண்ணீரில் வளர இது ஆவண செய்கிறது.[4] இலையானது ஒரு மீட்டர் வரை கிடைமட்ட பரவலைக் கொண்டிருக்கலாம்.[5][6]
பூ
தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். மலர்கள் பொதுவாக இலைகளுக்கு மேல் தடிமனான தண்டுகளில் காணப்படும். பூக்கள் பெரும்பாலும் ஒரு அடி வரை அகலம் கொண்டவையாக வளரும்.[7] இந்த பூக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்களைக் கொண்டிருக்கலாம்.[8][9] சில விலங்குகளைப் போலவே, தாமரை செடி தனது பூக்களின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.[10]
விதை

ஒரு தாமரை மலரிலிருந்து உருவாகும் பழத்தில் 10 முதல் 30 விதைகள் உள்ளது. ஒவ்வொரு விதையும் 1-2.5 செ.மீ அகலமும் 1-1.5 செ.மீ நீளமும் கொண்டு பழுப்பு நிற பூச்சுடன் முட்டை வடிவில் இருக்கும்.[11] தாமரை செடிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விதைகளை நீர்நிலைகளில் இடுகின்றன. இவற்றில் சில விதைகள் மட்டுமே உடனடியாக துளிர்விடுகின்றன. பெரும்பாலானவை வனவிலங்குகளால் உண்ணப்படுகின்றன, மீதமுள்ள விதைகள் நீர் நிலைகள் வரைந்தாலும் நீண்ட காலத்திற்கு செயலற்ற நிலையில் அப்படியே இருக்கும். மீண்டும் தண்ணீர் வரும் போது இந்த விதைகள் துளிர்விடுகின்றன. சாதகமான சூழ்நிலையில், இந்த விதைகள் பல ஆண்டுகள் வரை இருக்கும். சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தாமரை விதை பின்னர் முளைத்துள்ளது.[12]
Remove ads
சாகுபடி

தாமரை ஆறடி ஆழம் வரை நீரில் வளரும். குறைந்தபட்ச நீரின் ஆழம் ஒரு அடியாவது இருக்க வேண்டும். குளிர்ந்த காலநிலையில், ஆழமான நீர் மட்டம் கிழங்குகளை மிகவும் திறம்பட பாதுகாக்கிறது, மேலும் ஒட்டுமொத்தமாக சிறந்த வளர்ச்சிக்கும் மலரின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.[13][14] வளரும் பருவத்தில், பகல்நேர வெப்பநிலை 23–27 °C (73–81 °F) ஆக இருக்க வேண்டும்.[15] குளிர்காலத்தில் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில், தாமரை செடிகள் உறக்கநிலைக்கு செல்கின்றன. நீரிலிருந்து அகற்றப்பட்டு, காற்றில் வெளிப்பட்டால் இவை குளிர்ச்சியைத் தாங்காது.[16][17][18]

தாமரைக்கு ஊட்டச்சத்து வளம் மற்றும் களிமண் தேவைப்படுகிறது.[14] கோடை காலத்தின் தொடக்கத்தில், குறைந்தபட்சம் ஒரு கண்ணைக் கொண்ட வேர்த்தண்டுக்கிழங்கின் ஒரு சிறிய பகுதி குளங்களில் நடப்படுகிறது.[19][20][21][22] ஆரம்ப வளர்ச்சியை ஆதரிக்க, நீர் மட்டம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது நல்லது. தாவரங்கள் வளரும் போது நீர்மட்டம் அதிகரிக்கப்படலாம்.[23]
நடவு செய்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு இவை அறுவடைக்குத் தயாராகும். அறுவடை செய்வது கைமுறை உழைப்பால் செய்யப்படுகிறது. ஆழமற்ற நீரில் தண்ணீரிலிருந்து இவை வெளியே இழுக்கப்படுகிறது.[22] கோடையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், குளிர் காலத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறையும் பூக்களை பறிக்கலாம். நடவு செய்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, பூக்களின் உற்பத்தி அதன் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.[22] விதைகள் மற்றும் விதை காய்கள் நடவு செய்த நான்கு முதல் எட்டு மாதங்களில் அறுவடை செய்யலாம். இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு சூரியனில் உலர்த்திய பிறகு, அவை காய்களிலிருந்து பிரிக்கப்படுகின்றன.[22][16] ஏறத்தாழ ஆறு முதல் ஒன்பது மாதங்களில் சாப்பிடுவதற்கு ஏற்ற நிலைக்கு வேர்த்தண்டுக்கிழங்குகள் முதிர்ச்சியடைகின்றன.[23][24]
Remove ads
ஊட்டச்சத்து
தாமரை செடியின் அனைத்து பகுதிகளும் உண்ணக்கூடியவை, வேர்த்தண்டுக்கிழங்கு மற்றும் விதைகள் முக்கிய உண்ணும் பாகங்களாக உள்ளன. பாரம்பரியமாக வேர்த்தண்டுக்கிழங்குகள், இலைகள் மற்றும் விதைகள் நாட்டு மருத்துவம், ஆயுர்வேதம், பாரம்பரிய சீன மருத்துவம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.[25][26][27]
தாமரை வேர்த்தண்டுக்கிழங்குகள் மற்றும் விதைகள் மற்றும் அவற்றின் துணை தயாரிப்புகள் பரவலாக உண்ணப்படுகின்றன.[28][29][30] இதழ்கள் சில நேரங்களில் அழகுபடுத்தப் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் பெரிய இலைகள் உணவு பரிமாறவும் பயன்படுத்தப்படுகின்றன.[31]
Remove ads
கலாச்சார முக்கியத்துவம்
தாமரை வரலாற்று கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட ஒரு இனமாகும். இது இந்து மற்றும் பௌத்த மதம் இரண்டிலும் புனிதமான மலராகக் கருதப்படுகின்றது.[32] தாமரை மலர் கிறித்துவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[33]
ஆசிய நாடுகளில் பல கலைப்பொருட்களில் தாமரை மலர் சிம்மாசனம் மற்றும் இருக்கைகள் காணப்படுகிறது. தாமரை மலர்களும் பெரும்பாலும் கடவுளின் உருவங்களுடன் இணைக்கப்படுகின்றன.[34][35][36]
தாமரைப்பூவானது பண்டைய இந்தியாவில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. பண்டைய இந்தியப் புராணங்களிலும் தாமரை இடம் பிடித்துள்ளது. இந்து சமயத்தில், தனக்கடவுளான லட்சுமி ஒரு செந்தாமரையில் வீற்றிருப்பது போலவும், கல்வி கடவுளான சரசுவதி வெண்தாமரை மலரில் வீற்றிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றனர்.[37][38]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads