தாயம்மாள் அறவாணன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாயம்மாள் அறவாணன் (Thayammal Aravanan) தமிழகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1944 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தமிழ் ஆய்வாளர், பேராசிரியர், சொற்பொழிவாளர், பதிப்பாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.[1] [2]சங்காலப் பெண்பாற் புலவரான ஒளவையார் என்பவர் ஒருவர் அல்ல என்பதை ஆய்வின் மூலமாக வெளிப்படுத்திய முதல் தமிழறிஞர் என்ற சிறப்புக்கு உரியவராகவும் கருதப்படுகிறார். 'ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை' உள்ள பெண்பாற் புலவர்கள் பற்றி ஆய்வுசெய்து அவர்களின் வரலாற்றையும் பாடல்களையும் இவர் வெளியிட்டார்.

2025 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதியன்று தமிழ் அறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான செம்மொழி தமிழ் விருது வழங்கப்பட்டது. இந்த விருது ₹10 லட்சம் காசோலை மற்றும் பாராட்டுப் பத்திரம் கொண்டதாகும்.[3] [4]

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

கன்னியாக்குமரியில் சேந்தன்புதூர் கிராமத்தில் பகவதிப் பெருமாள் பிள்ளை, கோமதி இணையருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை திருவிதாங்கூர் சமத்தானத்தில் மலையாள வித்துவானாக இருந்தார். இவருக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர். இவர்களில் கணேசன் என்பவர் சுதந்திரப் போராட்டத் தியாகியாவார்.

தாயம்மாள் ஐந்தாம் வகுப்பு வரை மயிலாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றார். எட்டாம் வகுப்பு வரை தென் திருவிதாங்கூரின் முதல் ஆங்கிலப் பள்ளியான மயிலாடியில் உள்ள ரிங்கெல்தெளபே பள்ளியிலும் சுசீந்திரம் பள்ளியில் பள்ளிக்கல்வியும் பயின்றார். தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் புகுமுக வகுப்பும் தமிழில் இளங்கலைப்பட்டமும் பெற்றார். திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டம் பெற்றார்.

1969 ஆம் ஆண்டில் தாயம்மாள் அறவாணன் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அருணாசலம் (க.ப. அறவாணன்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அருணாசலம் அறவாணர் என்று அழைக்கப்பட்டார். இவர் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் பணியாற்றினார். இத்தம்பதியருக்கு அறிவாளன், அருள்செங்கோர் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Remove ads

தொழில்

பாபநாசத்தில் உள்ள திருவள்ளுவர் கல்லூரியில் விரிவுரையாளராக பத்து மாதங்கள் பணியாற்றினார். 1969 ஆம் ஆண்டு முதல் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றினார். 1970- ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் அறக்கட்டளையில் கணவர் அறவாணருக்கும் கடலூர் கந்தசாமி கல்லூரியில் தாயம்மாளுக்கும் பணி கிடைத்தது. சென்னை செல்லம்மாள் மகளிர் கல்லூரிக்கு தாயம்மாள் பணிமாற்றம் பெற்றார். பகுதி நேர ஆய்வாளராகச் சேர்ந்து 'குழந்தை இலக்கியம்-ஒரு பகுப்பாய்வு’ தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். பெண் மொழி, 1998-ஆம் ஆண்டில் தாயம்மாள் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ஆம் ஆண்டில் அன்னை தெரசா பல்கலைக் கழகத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார்.

Remove ads

விருதுகள்

  • 1987-ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு ’திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு’ நூலுக்கு வழங்கப்பட்டது.
  • ஒளவையார் அன்று முதல் இன்று வரை’ என்ற நூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்றது.
  • தமிழ்ச் சமூகவியல் ஒரு கருத்தாடல் என்ற நூலுக்கு இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் சிறந்த நூலுக்கான பரிசு வழங்கியது.
  • சிறந்த கல்வியாளருக்கான வாரியார் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2009-ஆம் ஆண்டில் தமிழக அரசின் கி.ஆ.பெ. விருது பெற்றார்.

நூல்கள்

  1. திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு
  2. பல்லாங்குழி-திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு
  3. மகடுஉ முன்னிலை (ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை: 2004)
  4. புதிய கோலங்கள்
  5. பெண்ணறிவு என்பது
  6. பெருமையே பெண்மையாய்
  7. தையல் கேளீர்
  8. தையலை உயர்வு செய்
  9. தடம் பதித்தோர்
  10. குழந்தை இலக்கியம் – ஒரு பகுப்பாய்வு
  11. தமிழ்ச் சமூகவியல்- ஒரு கருத்தாடல்
  12. பெண்ணெழுத்து இகழேல்
  13. கண்ணகி மண்ணில்
  14. பெண் இன்று நேற்று அன்று
  15. ஒளவையார் அன்று முதல் இன்று வரை
  16. பெண் பதிவுகள்
  17. தமிழ்ப்பெண்
  18. தமிழ்க்குடும்பம்-1919
  19. ஒளவையார்
  20. பெண்ணின் பெருந்தக்கது இல்
Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads