பாளையங்கோட்டை

வெயில் நகரம் From Wikipedia, the free encyclopedia

பாளையங்கோட்டைmap
Remove ads

பாளையங்கோட்டை (Palayamkottai) என்பது தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தின் திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். திருநெல்வேலி மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக இப்பகுதி தனி நகராட்சியாகச் செயல்பட்டு வந்தது.

விரைவான உண்மைகள் பாளையங்கோட்டை பாளை, நாடு ...
Thumb
1800களில் பாளையங்கோட்டை

கல்விக்கு பெயர் போன இங்கு மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் ஏராளம் அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் இருப்பதாலும் தமிழ்நாட்டில் முதல் முறையாக பார்வையற்றவர் மற்றும் காதுகேளாதோர் பள்ளி துவங்கப்பட்டதாலும் தமிழகத்தின் "ஆக்ஸ்போர்ட்” என்று பாளையங்கோட்டை பெருமையுடன் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பழமையானது மற்றும் மிகவும் பெயர் பெற்றதும் கூட.[1] இங்கு வ.உ.சி. நினைவு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது மற்றும் திருநெல்வேலியின் மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இங்குள்ள ஹைகிரவுண்ட் (தமிழில் பாளை மேட்டுப் பகுதி என்றழைக்கப்படுகிறது) என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. தற்போது திருநெல்வேலியின் புதிய பேருந்து நிலையம் இங்குள்ள வேய்ந்தான்குளம் பகுதியில் அமைந்துள்ளது என்பது தனிச் சிறப்பு.

மைசூர், குலசை தசராவிற்கு அடுத்த முக்கிய தசரா பாளையில் நடைபெறும் தசரா விழா ஆகும்.

Remove ads

அரசியல்

இது சட்டமன்றத்தினை பொருத்தவரையில் பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)யின் கீழ் வருகிறது. இங்கு மேலப்பாளையம், வண்ணார்பேட்டை, நெடுந்திடல், பாளை சந்தை, சமாதானபுரம், அண்ணா நகர் அரசு ஊழியர் குடியிருப்பு, சாந்தி நகர், வி. எம். சத்திரம், கே.டி.சி. நகர், பெருமாள்புரம், மகாராஜநகர், தியாகராஜநகர் உள்ளிட்டப் பகுதிகள் குறிப்பிடத்தக்கவை.

பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இந்திய நாடாளுமன்றத்தின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2]

Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads