தாருல் அமான் விளையாட்டரங்கம்
மலேசியாவில் உள்ள கால்பந்து விளையாட்டரங்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாருல் அமான் விளையாட்டரங்கம் (Darul Aman Stadium) மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு பல்நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். அரங்கம் தற்போது பெரும்பாலும் கால்பந்து போட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.[2] 1962 ஆம் ஆண்டு கெடா சுல்தானால் இந்த மைதானம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தென் கொரியாவிற்கு எதிரான போட்டியில் மலாயா 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.[3] 1997 ஆம் ஆண்டு விளையாட்டரங்கம் விரிவாக்கத்திற்குப் பிறகு 32,387 இருக்கைகளைக் கொண்டுள்ளது. 1997 ஆண்டு நடைபெற்ற உலக இளைஞர் வெற்றியாளர் போட்டிக்கான விளையாட்டரங்குகளில் இதுவும் ஒன்றாகும். இது கெடா தாருல் அமான் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ விளையாட்டு அரங்கமாகும்.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads