தாலியம்(III) ஆக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாலியம்(III) ஆக்சைடு (Thallium(III) oxide ) என்பது Tl2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இதைத் தாலியம் மூவாக்சைடு என்றும் தாலியம் செஸ்கியூவாக்சைடு என்றும் அழைக்கிறார்கள். இயற்கையில் இது அவிசெனைட்[2] என்ற கனிமமாக காணப்படுகிறது. பிக்சுபைட் கனிமத்தின் கட்டமைப்பைக் கொண்ட Mn2O3 இன் கட்டமைப்பை இது பெற்றுள்ளது. உலோகத்தன்மையும் அதிகக் கடத்துத் திறனும் கொண்ட தாலியம்(III) ஆக்சைடு வலுவிழந்த n-வகைக் குறைகடத்தியாகும். இக்குறைகடத்தி சூரியமின்கலன்களில் உள்ளாற்றலுக்கு பயன்படுகிறது[3]. கரிம உலோக ஆவிநிலைப் புறவளர்ச்சி முறையில் Tl2O3 தயாரிக்கும் முறை அறியப்பட்டுள்ளது[4]. நடைமுறையில் எதற்காகப் பயன்படுத்தினாலும் இச்சேர்மம் நச்சுதன்மை கொண்டது என்ற விழிப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும். ஈரப்பதம், மற்றும் அமிலங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் நச்சுத்தன்மையுள்ள தாலியம் சேர்மங்களே உருவாகின்றன.
Remove ads
தயாரிப்பு
தாலியம், ஆக்சிசன் அல்லது ஐதரசன் பெராக்சைடுடன் சேர்ந்து வினையில் ஈடுபட்டு காரத்தன்மையுள்ள தாலியம் (I) கரைசலை உண்டாக்குகிறது. தாலியம்(III) நைட்ரேட்டு, நீர்த்த பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலில் குளோரின் வாயுவால் ஆக்சிசனேற்றம் செய்யப்படுவதன் மூலமும் மாற்றுவழிமுறையில் இதைத் தயாரிக்கலாம்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads