தாளவாடி வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாளவாடி வட்டம் (Thalavadi taluka), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பத்து பத்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] கோபிச்செட்டிப்பாளையம் வருவாய் கோட்டத்தில் அமைந்த தாளவாடி வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் தாளவாடியில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 21 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

தாளவாடி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் இயங்குகிறது.

தோற்றம்

சத்தியமங்கலம் வட்டத்தில் இருந்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தின் நிலப்பரப்புகளைக் கொண்டு தாளவாடி வருவாய் வட்டம் 8 நவம்பர் 2016ல் புதிதாக நிறுவப்பட்டது.[3] [4]

புவியியல்

தாளவாடி வட்டத்தில் மக்கள்தொகை குறைந்திருப்பினும், அடர்ந்த காப்புக்காடுகளில் வாழும் மலைவாழ் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக இவ்வட்டம் உருவாக்கப்பட்டது. சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் பகுதியில் தாளவாடி வட்டத்தின் பெரும்பகுதிகள் கொண்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாளவாடி வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 63,359 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,444 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 5,900 ஆக உள்ளது. [5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads