தாவீதின் நட்சத்திரம்

யூதர்களின் அடையாளச் சின்னம் From Wikipedia, the free encyclopedia

தாவீதின் நட்சத்திரம்
Remove ads

தாவீதின் நட்சத்திரம் (Star of David, எபிரேயம்: מָגֵן דָּוִד) தாவீதின் கேடயம் என எபிரேயத்தில் அறியப்படும் இது, பொதுவாக யூதர்களின் அடையாளமாகவும் யூத மதத்தின் அடையாளமாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[1] இதன் வடிவம் இரு முக்கோணங்களினால் ஆன ஒரு அறுகோண நட்சத்திரமாகும் (Hexagram). இவ் அறுகோண நட்சத்திரம் யூதத்தின் அடையாளமாக 17ம் நூற்றாண்டிலிருந்து பாவிக்கப்பட்டு வருகிறது. 14ம் தொடக்கம் 16ம் நூற்றாண்டுகளில் மத்திய ஐரோப்பாவில் யூதக் கொடியில் பாவிக்கப்பட்ட சாலொமோனின் முத்திரையுடன் தொடர்புபட்ட தாவீதின் கேடயம் இதற்கான முன்னோடியாகும். இது மத்திய கால (14ம் தொடக்கம் 16ம் நூற்றாண்டு) யூத பாதுகாப்பு முத்திரையிலிருந்து (segulot) வந்திருந்திருக்கலாம்.

Thumb

"தாவீதின் கேடயம்" எனும் பதம் யூத செபப் புத்தகங்களில் (Siddur) "இசுரவேலின் கடவுள்" எனும் தலைப்பிற்காகப் பாவிக்கப்பட்டது.

Remove ads

வரலாறு

தாவீதின் நட்சத்திரம் எப்போதிருந்து பாவிக்கப்பட்டது என்பதில் தெளிவாற்ற நிலை காணப்படுகிறது. இது தாவீதின் காலத்தில் அதாவது கிட்டத்தட்ட கி.மு. 1000 ஆண்டளவிலிருந்து பாவிக்கப்பட்டது[2] என்ற கருத்திலிருந்து 6ம், 12ம், 17ம் நூற்றாண்டுகளில்தான் பாவிக்கப்பட்டது என்ற கருத்துகள் காணப்படுகின்றன. யூத அறிவுக்களஞ்சியம் 12ம் நூற்றாண்டு ஆரம்ப இலக்கிய யூத ஆவண மூலம் ஒன்று இவ்வடையாளம் பற்றிக் குறிப்பிடுவதை மேற்கோள் காட்டுகிறது.[3] இது 17ம் நூற்றாண்டிலிருந்து யூத சமூகத்தின் சின்னமாக பாவிக்கப்படுகிறது.

Remove ads

பல்வகை

  • ஒருங்குறியில் (யுனிகோட்) "தாவீதின் நட்சத்திரம்" U+2721 ()
  • உலகில் மிகப்பெரிய (2,400 மீட்டர்கள் (7,900 அடி) விட்டம்) தாவீதின் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் உள்ளது.21.6°S 114.16°W / -21.6; -114.16 [4].
  • இலண்டன் ஹீத்ரோ விமான நிலையம் 1950 களில் இந்த அமைப்பில் ஓடுபாதைகளை நிர்மாணித்தது. ஒவ்வொறு அமைப்பும் ஒரு மைலுக்கும் கூடிய நீளத்தைக் கொண்டிருந்தது.[5]

காட்சியகம்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads