யூதம்

From Wikipedia, the free encyclopedia

யூதம்
Remove ads

யூதம் (Judaismஎபிரேயம்יהודה, "யெகுதா" (Yehudah)) என்பது யூத இன மக்களின் சமயம் ஆகும். இது யூதர்களுடைய சமயம், மெய்யியல், பண்பாடு மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒரு கடவுட் கொள்கை உடைய பண்டைய ஆபிரகாமிய சமயமான இது தோராவை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இஸ்ரயேல் மக்களிடம் கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கையே யூத மதம் என்று யூதர்கள் கருதுகின்றனர். தோரா என்பது டனாக் அல்லது எபிரேய வேதாகம என்ற பெரிய உரையின் ஒரு பகுதியாகும். மேலும், மிட்ராஷ் மற்றும் தல்மூத் போன்ற பாரம்பரியமும், வாய்வழி தொகுப்புகளும் அடங்கிய துணை நூல்களும் உள்ளன. உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் பின்பற்றுபவர்களைக் கொண்ட யூத மதம் உலகின் பத்தாவது பெரிய சமயமாக இருக்கிறது.

விரைவான உண்மைகள் வகைப்பாடு, இறையியல் ...
Thumb
வெள்ளி பெட்டிக்குள், கையால் எழுதப்பட்ட தோரா புத்தகம். யூத கலை மற்றும் வரலாறு அருங்காட்சியகம், பாரிஸ், பிரான்சு.
Thumb
எபிரெயு வார்த்தை ஸோக்கிரினு (zokhreinu) பொறிக்கப்பட்டுள்ள கண்ணாடி நினைவகத் தட்டுப்படுத்தி - நம்மால் நினைவு கூரப்படுவது
Thumb
மாக்கடோனியக் குடியரசின் 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெள்ளி ஹனுக்கா மெனோரா (Hanukkah menorah)

மரபுவழி யூதமானதுதோரா யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள்  தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது,  யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.

யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதத்தை விட அதிக அளவு "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது. சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும். அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது. வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள முடியாது. புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.

யூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது.[1] வெண்கலக் காலத்தில்மத்திய கிழக்கு நாடுகளில், யூதம் ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது.[2] யூதம், ஒரு கடவுட் கொள்கை கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[3] எபிரேயர் மற்றும் இசுரயேலர்களைக் குறிக்கும் விதம்:

* எபிரேய வேதாகமம் புத்தகத்தில், யூதர்கள்.

* எஸ்தர் புத்தகத்தில், யூதர்கள்.

* மற்ற புத்தகங்களில் யூதர்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக "இஸ்ரேல் நாட்டின் பிள்ளைகள்".

யூத மதத்தின் நூல்கள், மரபுகள் மற்றும் மதிப்புகளால் வசப்படுத்தப்பட்ட பிற மதங்கள்:

* ஆபிரகாமிய சமயங்கள்
கிறிஸ்தவம்

* இசுலாம்

* பகாய் சமயம்.

யூத மதத்தின் பல அம்சங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதச்சார்பற்ற மேற்கத்திய நன்னெறிகளையும், சிவில் சட்டங்களையும் தாக்கின.  ஹீப்ராயிசம் முக்கிய காரணியாகக் கருதப்படக் காரணங்கள்:

* மேற்கத்திய நாகரிகம்எலனியக் காலம் வளர்ச்சி அடைந்தது

* யூதவியல் வளர்ச்சி

* கிறிஸ்தவத்தின் தாய் மதம்

* கிறிஸ்தவ சகாப்தத்தில் மேற்கத்திய இலட்சியங்கள் மற்றும் அறநெறிகள் கணிசமாக வடிவமைக்கப்பட்டன.[4]

யூதர்கள் சாதி ஒழிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.  யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றும் யூத மதத்துக்கு மாறியவர்கள் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டனர்.  2015 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 14.3 மில்லியனாக இருந்தது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 0.2% ஆகும்.[5]

43% யூதர்கள் இசுரேலில் வசிக்கின்றனர். 43% யூதர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்களில், பெரும்பாலானோர் ஐரோப்பாவில் வசிக்கின்றனர். எஞ்சியுள்ள சிறுபான்மை குழுக்கள், தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவலாக வசிக்கின்றனர்.

Remove ads

யூத சமயப் பிரிவுகள்

பழமைவாத யூதம்

2018ம் ஆண்டில் 14% அமெரிக்க யூதர்கள் பழைவாத இயக்கத்துடன் இணைந்துள்ளனர். இது யூத சட்டத்தை உருவாக்கும் கட்டமைப்பிற்குள் மாற்ற வேலை செய்யும் ஒரு பரந்த இயக்கம். பழமைவாத யூதர்களிடையே மகத்தான அனுசரிப்பு உள்ளது. பழமைவாத யூதம், யூதச் சட்டத்தை கட்டாயமாகப் பார்க்கிறது. பழமைவாத யூத ஜெப ஆலயங்கள் எபிரேயம் அல்லது குறைவான பாரம்பரிய வழிபாட்டு முறைகளைக் கொண்டிருக்கும். சமத்துவமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். மேலும் பலவிதமான நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம்.

மரபுவழி யூதம்

மரபுவழி யூத மதம் சுமார் 10% அமெரிக்க யூதர்களால் பின்பற்றப்படுகிறது மற்றும் நவீனத்துவத்துடன் பல்வேறு நிலைகளில் ஈடுபாடு கொண்ட பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த இயக்கத்தில் நவீன மரபுவழி யூதர்கள் உள்ளனர். அவர்கள் நவீன உலகத்துடன் முழுமையாக ஈடுபடுகிறார்கள். மேலும் மதச்சார்பற்ற வாழ்க்கை முறைகளுக்கு அவர்களின் வெளிப்பாட்டைத் தவிர்க்க அல்லது குறைக்கக்கூடிய குழுக்களையும் உள்ளடக்கியது.

மறுகட்டமைப்புவாத யூதம்

மறுகட்டமைப்புவாத யூத மதம், யூத மதத்தை ஒரு வளரும் யூத நாகரீகமாக பார்க்கிறது. மதத்தை அந்த நாகரீகத்தின் மையமாக கொண்டுள்ளது. யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற கருத்தை அவர்கள் நிராகரித்து, அவர்களின் சித்தாந்தத்தை பிரதிபலிக்கும் ஆசீர்வாதங்களையும் பிரார்த்தனைகளையும் உருவாக்கியுள்ளனர்.

சீர்திருத்த யூதம்

சீர்திருத்த யூத மதம் இன்று அமெரிக்காவில் மிகவும் பிரபலமான யூதப் பிரிவாகும். இந்த இயக்கம் முகாம்கள், இளைஞர் குழுக்கள், பல ஜெப ஆலயங்கள் மற்றும் பல யூத சமயப் பள்ளிகளை நடத்துகிறது.

புதுப்பிக்கப்பட்ட யூதம்

புதுப்பிக்கப்பட்ட யூதம், பழமைவாதம் யூதம் அல்லது மரபுவழி யூதம் போன்ற ஒரு முறையான பிரிவாக கருதப்படவில்லை. இது அனைத்து மதப்பிரிவுகளிலிருந்தும் யூதர்கள் மற்றும் இணைக்கப்படாத யூதர்கள், கிழக்கு மதங்களில் ஆன்மீக வீடுகளைக் கண்டறிந்த யூதர்கள் மற்றும் யூதர்கள் அல்லாதவர்களை அரவணைக்கும் ஒரு இயக்கம் ஆகும்.

மனிதநேய யூதம்

மனித நேய யூதம் 1963ஆம் ஆண்டு ரப்பி ஷெர்வின் ஒயின் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த இயக்கம் யூத மக்களின் வரலாறு, பண்பாடு, நூல்கள், இசை, கலை, உணவு, சடங்குகள் மற்றும் நடைமுறைகள் என வரையறுக்கின்றனர்.

Remove ads

நம்பிக்கையின் பண்புகள் மற்றும் கொள்கைகளை வரையறுத்தல்

பண்புகள் வரையறை

பிற கடவுள்களைப் போலன்றி, எபிரெயர் கடவுள், கூறுபடா  ஒற்றையராகவும் தனித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.  மாறாக, எபிரேய கடவுளுக்கு, மற்ற கடவுட்களுடன் உறவு இல்லை. ஆனால் அவர், உலகோடும், குறிப்பாக தான் படைத்த மக்களோடும் முக்கிய உறவுகள் வைத்துள்ளார். இவ்வாறு யூத மதவாதம் தார்மீக ஒரு கடவுட் கொள்கையுடன்  தொடங்குகிறது. இது கடவுள் ஒருவரே என்றும், அவர் மனிதகுலத்தின் செயல்களைப் பற்றி அக்கறை கொள்வதாகவும் கூறுகிறது.  எபிரெயு விவிலியம் டனாகின்படி, ஆபிரகாமுக்கு ஒரு பெரிய தேசத்தை உண்டாக்கித் தருவதாக கடவுள் அவருக்கு உறுதியளித்தார். பல தலைமுறைகளுக்குப் பிறகு, ஒரே ஒரு கடவுளை நேசிக்குமாறும், அவரையே வணங்குமாறும் இசுரயேலருக்கு அவர் கட்டளையிட்டார். அதாவது, யூத தேசம் உலகிற்கான கடவுளுடைய அக்கறையை பேணுவதாகும்.  யூத மக்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார். அதாவது, யூதர்கள் கடவுளுடைய அன்பை மக்களுக்குப் பிரதிபலிக்க வேண்டும். இந்த இரண்டு கட்டளைகள் கடவுளின், 613 கட்டளைகளில், பிரதான கட்டளைகளாகும். இந்த உடன்படிக்கை (விவிலியம்) மற்றும் சார்ந்த சட்டங்கள் யூதம் மதத்தின் அடிப்படையாகும்.

Remove ads

யூத விடுமுறை நாட்கள்

யூத நாட்காட்டிகளில், யூதர்களுக்கான சிறப்பு விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யூத வரலாற்று நிகழ்வுகளைக் குறிக்கின்றன. அவை, படைப்பு, வெளிப்பாடு மற்றும் மீட்பு போன்ற, கடவுளுக்கும் உலகத்திற்கும் இடையிலான உறவை கருப்பொருள்களாகக் கொண்டுள்ளன.

Thumb
யூதர்கள் சுக்கோட் கொண்டாடுவது, சி. 1900. யூத கலைக்களஞ்சியம் (1901 முதல் 1906 வரை) எனும் நூலிலிருந்து: இப்போது பொதுக் களத்தில் உள்ளது. புகாரான் (Bukharan) 2

ஓய்வு நாள்:

ஓய்வு நாள் அல்லது ஷப்பத் (Shabbat) என்பது யூத சமயத்தைப் பொறுத்தவரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த கடவுள் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும்.[6] ஓய்வு நாளின் போது, யூதர்கள் மெலகாஹ் (melakah) எனும் 39 பிரிவுகளின் கீழ் வரும் எந்த செயல்களிலும் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. உண்மையில், ஓய்வு நாளின் போது, தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் வழக்கமான பொருளில் "வேலை" எனக் கருதப்படுவது இல்லை. தடை செய்யப்பட்ட வேலைகளில் சில, தீ மூட்டுதல், விளக்கு எரித்தல், பணம் பயன்படுத்துதல், பொது திரளம் சுமத்தல், போன்றவை ஆகும்.

மூன்று புனிதப் பயணத் திருவிழாக்கள்

சாக்ஜிம் (chaggim) எனப்படும் யூத புனித நாட்கள், யூத வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அவை,

  • எகிப்திலிருந்து வெளியேறுதல்,
  • தோராவைக் கொடுத்தல்,
  • பருவ மாற்றங்கள்,
  • விவசாய சுழற்சி மாற்றங்கள் போன்றவை ஆகும்.

யூத மதத்தின் மூன்று முக்கிய திருவிழாக்கள், சுக்கட் (Sukkot), பாஸ்கா (Passover) மற்றும் சாவ்வுட் (Shavuot) ஆகியவை ஆகும். இவை "ரெகலிம்-regalim" என்னும் சமயத்துறைத்தலைமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை ஆகும்.

உயர் புனித நாட்கள்

யமிம் நொரைம் (Yamim Noraim) அல்லது "பயபக்தி  நாட்கள்" எனப்படுபவை 'தீர்ப்பு' மற்றும் 'மன்னிப்பு' ஆகியவற்றைச் சுற்றியுள்ள கோட்பாடுகளின் அடிப்படையிலான உயர் புனித நாட்கள் ஆகும். அவற்றுள் முக்கியமானவை:

1. ரோஷ் ஹஷானா (Rosh Hashanah)

2. யோம் கிப்பூர் (Yom Kippur)

ரோஷ் ஹஷானா: இது உயர் புனித நாட்களில் முதலாவது ஆகும். யூத நாட்காட்டியில் முதல் மாதமான திஸ்ரி மாதத்தின் முதல் தினம் ஆகும். இது "நினைவுகூர் நாள்" என்றும், "ஷோபார் ஊதுதல் தினம்" என்றும், "ஆண்டின் தலை நாள்" என்றும் குறிப்பிடப்படுகிறது.

யோம் கிப்பூர்: இது யூத ஆண்டின் புனிதமான நாள் ஆகும். யூதத்தின் மிக முக்கியமான, உள்ளார்ந்த நோன்பு இந்நாள் முதல் தொடங்கும். இது, ஒருவர் தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடும் நோக்கம் உடையது ஆகும்.

பூரிம் (Purim)

Thumb
காகிதம் மற்றும் அலங்கார கூறுகளுடன் கையெழுத்து தனித்துவம் பெற்ற ஒளிரும் பெயர்த்தகடு. குர்திஷ் (Kurdish) யூதர்களிடையே புரீம் (Purim) வழக்கத்தில் உள்ள நான்கு புனித கவிதைகள், எஸ்தர் புத்தகத்தின் வசனங்கள், மெகில்லாவின் (Megillah) வாசிப்புக்கு முன்பும் பின்பும் இறைவனிடம் கோரும் ஆசீர்வாத ஜெபம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

பூரிம் ஒரு மகிழ்ச்சியான யூத விடுமுறை நாள் ஆகும். பாரசீக யூதர்களை அழிக்க முயன்ற துன்மார்க்கன் ஹாமானின் (Haman) சதியிலிருந்து விடுவித்த நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது எஸ்தரின் விவிலியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுக்கா (Hanukkah)

யூதர்கள், ஹனூக்கா எனும் தீபத் திருநாள் அல்லது ஒளி விழாவைக் கொண்டாடுகிறார்கள். இத்திருநாள் எபிரேய நாட்காட்டியின் கிசுலேவ் மாதத்தின் 25 ஆம் நாள் துவங்குகிறது.  எட்டு நாட்கள் நடைபெறுகிறது. எட்டாவது நாள் எட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

உண்ணா நோன்பு நாட்கள்

திஷா பீஏவ் (Tisha B'Av) எனப்படுவது யூதர்களின் முதல் மற்றும் இரண்டாம் கோயில்களின் அழிவை நினைவுகூரும் ஒரு துக்கம் மற்றும் விரத நாள் ஆகும். இது பிற்காலங்களில், ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்ட நினைவு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

தோரா கல்வி

திருவிழாவின் முக்கிய மற்றும் ஓய்வு நாள் அல்லது ஷப்பத் பிரார்த்தனை சேவைகள் டோராவின் பொது வாசிப்பில் உள்ளன. தனக் (Tanakh) மற்றும் ஹஃப்தரத் (Haftarah) ஆகியவற்றின் வாசிப்புகளும் உடன் இணைக்கப்படும்.

Remove ads

யூத சமய சிறப்பு செயல்பாடுகள்

  • தயான் (Dayan-நீதிபதி) - இவர் பெத் டின் (beth din) எனும் ரப்பினிகல் (rabbinical) நீதிமன்றத்தின், நியமிக்கப்பட்ட ரப்பி (rabbi) எனும் நீதிபதி ஆவார். இவர் யூத சட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்றவர். இஸ்ரேலில், யூத மத நீதிமன்றங்கள் மூலம், யூத சமுதாய திருமணங்கள், விவாகரத்துகள், மத மாற்றங்கள், நிதி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.
  • மோஹெல் (Mohel-விருத்தசேதகர்) - ஆண்குறி நுனித்தோல் அகற்றும் நிகழ்வு விருத்தசேதனம் எனப்படுகிறது. இதனைச் செய்பவர், விருத்தசேதனம் செய்வதில் தகுதிவாய்ந்த நிபுணரிடம் பயிற்சி பெற்றவராகவும், விருத்தசேதன சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவராகவும், இருக்க வேண்டும். இவரே பிரிட் மிலாஹ் (brit milah) எனும் விருத்தசேதனம் செய்யத் தகுதி உடையவர்.
  • ஷோசெட் (Shochet) என்பவர் ஆன்மீக பலி கொடுப்பவர் - யூதர் மரபுப்படி ஆன்மீக பலி கொடுத்து கசாப்பு செய்து, கோஷர் (kosher) எனும் இறைச்சி (kosher) செய்பவர். இவர் கஷ்ரத் (kashrut) சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் மற்றொரு ஷோசெட்டிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சோஃபர் (Sofer) என்பவர் படி எடுப்பவர். தோரா (Torah) பக்கமுருட்டிகள், டெஃபில்லின் (tefillin) எனும்  யூதர்கள் அணியும் மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழைகள், மெஸுஸெட் மெஸ்ஸ்சோட் (mezuzot) எனும் கதவு துணி சுருட்டுகளில் எழ்ய்துதல், ஜிட்டீன் (gittin) எனும் விவாகரத்து அறிக்கைகள் தயாரித்தல் ஆகியவற்றை எபிரெய மொழியில் கையெழுத்து தனித்துவத்துடன் எழுதுபவராக இருக்க வேண்டும். இவர் யூத சட்டத்திலும், யூத புனித நூல்கள் எழுதுவதிலும் கடுமையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ரோஷ் யேசீவா (Rosh yeshiva) - இவர் யஷீவாவை இயங்கும் ஒரு தோரா அறிஞர்.
  • யஷீவாவின் மஷ்கியாச் (Mashgiach) - யேசீவாவைப் பொறுத்து, வருகை மற்றும் சரியான நடத்தைக்கு ஒரு தனிநபர் பொறுப்பாக இருக்க வேண்டும். அவரே மாணவர்களின் உணர்ச்சி மற்றும் ஆன்மீக நலனை மேற்பார்வை செய்பவராகவும், முசார் (mussar) எனும் யூத நெறிமுறைகள் பற்றிய விரிவுரைகள் அளிப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • மஷ்கியாச் - கோஷர் உணவு தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், சமையற்காரர்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பல நிலைகளில் மேற்பார்வை செய்து, கோஷர் உணவின் தரத்தை உறுதி செய்கிறார்கள். கஷ்ரட்டின் விதிகளில் நிபுணராக இருக்க வேண்டும். ஒரு ரப்பியிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads