தாவூத் இப்ராகிம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாவூத் இப்ராகிம் (Urdu: داؤد ابراہیم) டி-கம்பெனி என்ற மும்பையில் அமைந்த குற்றவாளி அமைப்பின் தலைவர் ஆவார்.[1][2]இன்டர்போலின் குற்றவாளிகளின் பட்டியலில் கடுமையாகத் தேடப்படுவர்களில் ஒருவராக உள்ளார். 1993 மும்பை குண்டுவெடிப்புகளை இவர் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி அதற்கு நிதியுதவி செய்துள்ளார்.[3]
2003இல் அமெரிக்க அரசு இவரை "உலகத் தீவிரவாதி" என்று குறித்து இவரின் பணம், சொத்துகளை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளுக்கு கோரிக்கை செய்துள்ளது. இந்திய அரசு இவர் தற்போது கராச்சியில் வசிக்கிறார் என்று கூறுகிறது, ஆனால் பாகிஸ்தான் அரசு இதனை மறுக்கின்றது.
2011இல் கராச்சி, பாகிஸ்தானில் நடைபெற்ற இவரின் மகனின் திருமணத்தில் பாகிஸ்தான் உயரதிகாரிகள், உளவுத்துறையினர் வந்ததாக தகவல்கள் உள்ளன.[2]
உலகில் அதி சக்திவாய்ந்த மனிதர்களில் இவரிற்கு 52ஆவது இடத்தை போர்ப்ஸ்(Forbes) சஞ்சிகை வழங்கியுள்ளது.[2]
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads