திஃக்வானா

மெக்சிக்கோ நாட்டின் பாஜா கலிபோர்னியாவின் நகரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திஃக்வானா (Tijuana, /tˈhwɑːnə/ tee-WHAH-nə; எசுப்பானியம்: [tiˈxwana]) மெக்சிக்கோ நாட்டின் பாகா கலிபோர்னியா மாநிலத்தின் மீப்பெரும் நகரமாகும். பாகா கலிபோர்னியா மூவலந்தீவிலும் இதுவே மிகப்பெரும் நகரமாகும். திஃக்வானா பெருநகரப்பகுதியின் மையத்திலும் பன்னாட்டு சான்டியேகோ-திஃக்வானா பெருநகரப்பகுதியின் மையத்திலும் அமைந்துள்ள திஃக்வானா மெக்சிகோவின் மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[4] இப்பகுதியின் பொருளியல் நிலை, கல்வி, பண்பாடு, கலை, அரசியலில் திஃக்வானா முக்கியப் பங்காற்றுகின்றது. இந்த நகரமும் இதனைச் சுற்றியுள்ள பெருநகரப் பகுதிகளும் நாட்டின் வடமேற்கில் முதன்மைத் தொழில் மற்றும் தாக்கமிக்க மையமாக விளங்குகின்றன. திஃக்வானா உலகளாவிய நகரத் தகுதி பெற்றுள்ளது.[5] As of 2015, திஃக்வானா நகரத்தின் மக்கள்தொகை 1,641,570 ஆகும்.[1]

விரைவான உண்மைகள் திஃக்வானா, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads