திண்ணாகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திக்நாகர் (Dignāga) அல்லது திண்ணாகர் (Diṅnāga) யோகாசாரம் எனும் பௌத்த சமயப் பிரிவை முன்மொழிந்த பௌத்த அறிஞர். திண்ணாகர் கி.பி 480 முதல் 540 வரை வாழ்ந்ததாக கருதப்படுபவர். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் குறைவே. பௌத்த தர்க்கவியலை[1] வடிவமைத்த முன்னோடி என்று அறியப்படும் திண்ணாகர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரத்திற்கு அருகில் இருந்த சிம்மவாக்தம் எனும் கிராமத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது.[2] நாகதத்தர் என்ற பௌத்த குருவிடம் சீடராக இருந்து பின்னர் வசுபந்து எனும் பௌத்த குருவிடம் பௌத்த இயலை கற்றவர். இவரது தர்க்கவியல் நூல்களுக்கு தர்மகீர்த்தி பௌத்த அறிஞர் விளக்க உரைகள் எழுதியுள்ளார்.

Remove ads
எழுதிய நூல்கள்
- திண்ணாகரின் முதன்மையான தருக்க நூல் பிரமாண-சமுச்சயம் (Compendium of Valid Cognition), (Apoha).[3]
- ஏது சக்கரம் (நிகழ்ச்சித் திகிரி), இந்நூல் முறையான பௌத்த தர்க்கவியலை விளக்கும் முதல் நூல்.
- ஆலம்பன-பரிக்சா, (The Treatise on the Objects of Cognition)
- அபிதர்மகோச-மர்ம-பிரதீப – வசுபந்துவின் அபிதர்மகோச உரை
- திரிகால-பரிக்சா, (Treatise on the tri-temporality)
- நியாய-முக்தா (Introduction to logic).
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads