திட்டக்குடி வைத்தியநாதர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

திட்டக்குடி வைத்தியநாதர் கோயில்
Remove ads

திருவதிட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி என்ற புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். ஒரு காலத்தில் வேங்கை மரங்கள் அதிகமாக இருந்ததால் இவ்விடம் வேங்கைவனம் என்றும் அழைக்கப்பட்டது.[1]

Thumb
திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில்
விரைவான உண்மைகள் வைத்தியநாத சுவாமி கோயில், அமைவிடம் ...
Remove ads

விபரங்கள்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திட்டக்குடியில் இக்கோயில் அமைந்துள்ளது. புண்ணிய நதிகளில் ஒன்றான யமுனை ஆற்றுக்கு ஒப்பான ”தென்யமுனை” என்று போற்றப்படும் வெள்ளாற்றின் வடகரையில் அமைந்துள்ள திருத்தலமே ”திட்டக்குடி” என்னும் பேரூராகும். இத்திருத்தலம் முன்னாளில் வதிட்ட முனிவா் வசித்ததால் ”திருவதிட்டக்குடி” என்று வழங்கப்பட்டு, இந்நாளில் திட்டக்குடி என்று வழங்கபடுகிறது. இத்திருத்தலம் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழுதூா் என்ற ஊாிலிருந்து கிழக்கே 16 மைல் தொலைவில் உள்ளது. விழுப்புரம் - திருச்சி தொடருந்துப் பாதையில் அமைந்துள்ள பெண்ணாடம் தொடருந்து நிலையத்தில் இருந்து மேற்கே 12 மைல் தொலைவில் அமைந்துள்ளது. விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடிக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

Remove ads

கோயில்

இத்திருத்தலத்தின் மூலவர் வைத்தியநாத சுவாமி, தாயார் அசனாம்பிகை அம்மன், தல விருட்சம்(மரம்)- வேங்கை மரம் , தீர்த்தம் -சுத்திகா தீர்த்தம் , 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.[சான்று தேவை] வழிபாட்டு நேரம்- காலை 5 மணி முதல் 9 மணி வரை மாலை 4 மணி முதல் 7 மணி வரை.

சிறப்பு

நடுநாடு எனப் போற்றப்படும் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திட்டக்குடி என அழைக்கப்படும் திருவதிட்டக்குடி என்னும் திருத்தலம். சோழமண்டலத்து புள்ளிருக்கும் வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) என்ற திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்புரியும் அருள்மிகு வைத்தியநாத சுவாமியின் பெயரினையே இத்தலத்தினில் உரையும் இறைவனும் பெற்று விளங்குவது சிறப்பு. நடு நாட்டுத் திருத்தலங்களில் சக்தி வழிபாட்டினை சிறப்பித்து கூறும் தலங்களில் இத்தலமே முதன்மையானது . சிவன் இத்தலத்தில் நோய்தீர்க்கும் மருத்துவராக அருள்புரிவதால் வைத்தியநாதர் எனும் திருப்பெயர் பெற்றார். இவ்விடம் முன்னொரு காலத்தில் வேங்கை மரம் சூழ்ந்த இடமாக திகழ்ந்ததால் வேங்கை வனம் எனப்பட்டது. அசனம் என்பது வேங்கை மரத்தை குறிக்கும் வடமொழி சொல்லாகும் .அதனால் தாயாருக்கு வேங்கை வன நாயகி எனும் பெயரும் உண்டு.இக்கோயிலின் பெருமைகளை அறிந்த பல மன்னர்கள் இக்கோயிலை கட்டி ஏராளமான திருப்பணிகளை செய்துள்ளனர்.தீராத நோய்வாய்ப்டடவர்கள் இங்கு வந்து வைத்தியநாத சுவாமியையும் , அசனாம்பிகை அம்மனையும் வழிபட்டால் நோய் குணமடையும் என்பது வரலாறு. கண் இழந்த குலோத்துங்க சோழன் கண் பார்வை பெற்றது , ராமன் பிரம்மகத்தி தோஷம் நீங்கப் பெற்றதும் இத்தலத்தில்தான் . எட்டு லிங்களும் கோயிலின் உள்ளே அமைந்திருப்பது சிறப்பு. இது ஏழு துறைகளுள் (வதிட்டதுறை-திட்டக்குடி) 5 ஆவது துறையாகும்.சூரியன் தன் கிரகணங்களால்(பங்குனி மாதம் மீன ராசியில் மூலவர் மீது சூரிய கதிர்கள் பாயும் ) சிவனை வழிபடும் தலங்களுல் இதுவும் ஒன்றாகும். வதிட்டருக்கும் அருந்ததிக்கும் திருமணம் நடைபெற்ற தலம்.சுவாமி திருமணக்கோலத்தில் (வலப்புறம் அம்மன்) வீ்ற்றிருப்பதால் இங்கு திருமணம் நடைபெறுவது சிறப்பு.

தொன்மக் கதைகள்

அதன் தல புராணங்களில் உள்ள படி, வதிட்ட முனிவர் இங்கு வசித்ததால் இது திருவதிட்டக்குடி என்று அழைக்கப்பட்டு இந்நாளில் திட்டக்குடி என்று அழைக்கப்படுகின்றது. இங்குதான் வதிட்டர் அருந்ததியை மணந்து தவவாழ்க்கையை தொடர்ந்தார் என கூறப்படுகிறது. வதிட்டர் தன் வரத்தால் கிடைத்த காமதேனு என்ற வான்சுரபி இங்கு மேய்ந்து கொண்டிருந்தது .ஒரு நாள் அதன் கால் குளம்பு ஒரு புற்றின்மேல் பட்டது. புற்றிலிருந்து இரத்தம் பெருகி வருவதை கண்டது .இரத்தப் பெருக்கை நிறுத்த அதன் மீது பாலை சுரந்தது. அவ்விடத்திற்கு வந்த வதிட்டர் அங்கு சுயம்பு லிங்கம் இருப்பதை கண்டார். வதிட்டர் காமதேனுவிடம் அங்கு ஓர் ஆலயம் அமைக்க கூறினார். அதன்படியே காமதேனுவும் சுயம்பு லிங்கத்திற்கு ஆலயம் கட்டியது. அதன்படியே காமதேனுவும் அந்த சுயம்பு லிங்கத்திற்கு ஓா் ஆலயம் கட்டியது. அதுவே ஆலயத்தில் தற்போதும் உள்ள கா்ப்பககிரகம் ஆகும். ஆலயத்தில் உள்ள நடராஜா் சன்னிதியின் வெளிப்புறம், மேல் பாகத்தில் காமதேனு சிவலிங்கத்தின் மேல் பால் சொாிந்த நிலையில் நிற்பதைச் சிறிய புடைப்புச் சிற்பமாக அமைத்துள்ளனா்.[2][3]

அந்த லிங்கத்தை பூசித்து அக்கோயிலுக்கு மகிமை உண்டாக்கினார். அங்கு தவ நிலையில் உயர்வை அடைந்தார் . அப்போது இராமனின் முன்னோரான மனு சக்ரவர்த்தி வதிட்டரை வணங்கி தனது சூரியவம்சத்துக்கு அவரே குலகுருவாக இருக்க வேண்டும் என வேண்டினார். அதனை வதிட்டரும் ஏற்றுக் கொண்டார். வதிட்டரின் வேண்டுகோளினை ஏற்று மனு சக்ரவர்த்தி வனத்தை அழித்து ஒரு ஊரை உருவாக்கினார். அதுவே திருவதிட்டக்குடி ( திரு+வதிட்டர்+குடி) என்று அழைக்கப்பட்டது. பல முனிவர்களும் ரிஷிகளும் வேதங்களையும் கலைகளையும் இங்கு கற்றனர் . எனவே வித்யாரண்யபுரம் எனும் பெயரும் இத்திருத்தலத்திற்கு உண்டு. மனு சக்ரவர்த்தி இத்திருக்கோயிலை ஆகம விதிப்படியும், தெய்வாம்சம் பொருந்திய கோயிலாகவும் கட்டினார். வைத்திநாத சுவாமி உடனுறை அசனாம்பிகை அம்மனை வழிபட்டு தவம்புரிந்து வதிட்டர் “ராஜ ரிஷி“ என்னும் சிறப்பை பெற்றார்.

Remove ads

பெயர்காரணம்

இறைவன் நோய் தீர்க்கும் மருத்துவராக அருள்புரிவதால் இத்திருத்தலம் வைத்தியநாத சுவாமி கோயில் எனும் பெயரை பெற்றது. சுயம்புவாக தோன்றியதால் சுவாமிக்கு தான்தோன்றீஸ்வரர் நாயனார் கோயில் என்ற பெயரும் உண்டு.

அமைவிடம்

சுவேத நதி (வெள்ளாறு) வடகரையில் அமைந்துள்ளது.

வழி 1 : சென்னை - திட்டக்குடி தேசிய நெடுஞ்சாலை எண்-45 ல் இராமநத்தம் (தொழுதூர்) என்ற ஊறிலிருந்து கிழக்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது.

வழி 2 : கடலூர் , திருச்சி மாநில நெடுஞ்சாலையில் விருத்தாசலத்திலிருந்து மேற்கே 30 கி.மீ தொலைவில் உள்ளது.

அருகில் உள்ள தொடர்வண்டி(இரயில்) நிலையம் - விருத்தாசலம் மற்றும் பெண்ணாடம்.

குடமுழுக்கு விழா

Thumb
திட்டக்குடி வைத்திநாதசுவாமி கோயில் குடமுழுக்கு விழா

2015 சனவாி 26 ஆம் நாள் நெடுநாட்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற்றது.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads