திண்டல் உயர்மட்ட சாலை, ஈரோடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திண்டல் உயர்மட்ட சாலை (Thindal Elevated Corridor), ஈரோடு மாநகரத்தில் 5.4 கி.மீ. நீளத்திற்கு உயர்மட்டத்தில் கட்டமைக்கப்படும் மேம்பால சாலைத் திட்டமாகும். இது, ஈரோடு மாநகரத்தில் கிழக்கு-மேற்காக நீண்டு செல்லும் பெருந்துறை சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தமிழ்நாடு அரசால் உருவக்கப்பட்ட திட்டமாகும். பெருந்துறை சாலை உயர்மட்ட மேம்பாலம் (Perundurai Road Elevated Corridor) என்றும் அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் திண்டல் உயர்மட்ட சாலை, வழித்தடத் தகவல்கள் ...
Remove ads

அமைவிடம்

இந்த உயர்மட்ட சாலையானது மாநில நெடுஞ்சாலை 96-ல் காலிங்கராயன் மாளிகை அருகே துவங்கி 5.4 கி.மீ. பயணித்து திண்டல்-பெரியசேமூர் இணைப்பு உள்வட்டச்சாலை சந்திப்பைக் கடந்து வெளி வட்டச்சாலைக்கு முன்னதாக திண்டல்மேடு அருகே முடிகிறது.

நடவடிக்கைகள்

Thumb
ஈரோடு மாநகரின் விரிவான சாலை அமைப்பு

இந்த திட்டமானது 2017ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.[1] மேலும் 2018ல் 300கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்த இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2019ல் இவ்வழியில் 112 இடஙளில் மண்பரிசோதனை செய்யப்பட்டு இதற்கான திட்ட அறிக்கையும் தயார் செய்யும் பணியும் முடிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான கட்டுமானப்பணிகள் துவங்கும்.[2][3]

மேலும் ஈரோட்டில் எஸ்.எஸ்.வி.என். பள்ளி முதல் சுவஸ்திக் கார்னர் வரை மற்றொரு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான அறிவிப்பையும் 2019ம் ஆண்டு சட்டசபையில் முதல்வர் வெளியிட்டுள்ளார்.[4]

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads