திண்டிவனம் தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திண்டிவனம் ரயில் நிலையம் (Tindivanam railway station) இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் தாலுகாவின் தலைமையகமான திண்டிவனத்திற்கு சேவை செய்யும் இரயில் நிலையமாகும். சென்னை புறநகர் இரயில்வேயின் தெற்குப் பாதையில் உள்ள இந்த நிலையம் தெற்கு இரயில்வே மண்டலத்தின் சென்னை இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. திண்டிவனம் இரயில் நிலையத்தின் நிலையக் குறியீடு டி.எம்.வி என்ற ஆங்கில எழுத்துகளால் குறிக்கப்படுகிறது.
Remove ads
அமைவிடம்
திண்டிவனம் ரயில் நிலையம் தேசிய நெடுஞ்சாலை எண் 47 இல் அமைந்துள்ளது. இப்பாதை மாநிலத் தலைநகரான சென்னையை மத்திய மற்றும் தெற்கு தமிழ்நாட்டுடன் இணைக்கும் முக்கியப் பாதையாகும். அருகிலுள்ள சென்னை விமான நிலையம் இங்கிருந்து 108 கிலோமீட்டர் (67 மைல்) தொலைவில் உள்ளது.
திண்டிவனம் இரயில் நிலையம் இரண்டு நடைமேடைகளைக் கொண்டுள்ளது. விழுப்புரம்-சென்னை வழித்தடத்தில் அமைந்துள்ளது இரயில் நிலையம் அமைந்துள்ளது.[2] மேலும் சென்னை எழும்பூரில் இருந்து மத்திய மற்றும் தெற்கு தமிழகத்திற்கு செல்லும் அனைத்து இரயில்களும் இந்த நிலையத்தின் வழியாகவே செல்ல வேண்டும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads