தினேஷ்சந்திர சர்கார்

இந்திய கல்வெட்டுவியலாளர், வரலாற்றாசிரியர், நாணயவியல் அறிஞர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் (1907-198 From Wikipedia, the free encyclopedia

Remove ads

தி. சி. சிர்கார் எனவும் தி.சி.சர்கார் எனவும் அழைக்கப்படும் தினேஷ்சந்திர சிர்கார் (Dineshchandra Sircar) (1907 1985), ஓர் கல்வெட்டியல் நிபுணரும், வரலாற்றாசிரியரும், நாணயவியல் மற்றும் நாட்டுப்புறவியலாளரும் ஆவார். குறிப்பாக இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் கல்வெட்டுகளை புரிந்து கொள்ளும் பணிக்காக அறியப்பட்டவர். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (1949-1962) தலைமை கல்வெட்டு ஆசிரியராகவும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் கார்மைக்கேல் பேராசிரியராகவும் (1962-1972) இந்திய வரலாற்று காங்கிரசின் பொதுத் தலைவராகவும் இருந்தார். 1972 இல், சர்காருக்கு வில்லியம் ஜோன்ஸ் நினைவு தகடு வழங்கப்பட்டது.

விரைவான உண்மைகள் தினேஷ்சந்திர சர்கார், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

சர்கார் கிருஷ்ணாநகரில் ஆயுர்வேத மருத்துவர்களின் குடும்பத்தில் பிறந்தார். 1929-இல் சமசுகிருதத்தில் மேதகைமை பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் 1931-இல் தனது முதுகலை பட்டத் தேர்வில் முதல் வகுப்பைப் பெற்றார்.

சான்றுகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads