திமிரு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திமிரு (Thimiru) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] தருண் கோபியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஷால், ரீமா சென், சிரேயா ரெட்டி போன்ற பலர் நடித்துள்ளனர்.
Remove ads
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மதுரையிலிருந்து சென்னையில் அமையப்பெற்றிருக்கும் கல்லூரியில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள வரும் கணேஷ் (விஷால்) பல கும்பல்களால் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் வலை விரித்துத் தேடப்படுகின்றார்.பின்னர் கல்லூரியில் படிக்கும் சக மாணவனால் கொலை செய்யப்படவிருந்த சிறீமதியைக் (ரீமா சென்) காப்பாற்றுகின்றார்.பின்னர் கணேஷ் மீது காதல் கொள்ளும் சிறீமதி பல முயற்சிகளினால் பேருந்து நிலையத்தில் தெரிவிக்க முயலும் போது அங்கு வரும் கும்பல்களால் அவரின் காதல் தடைப்பட்டது.அங்கு வரும் கும்பல்கள் கணேஷால் மதுரையில் திருமணம் செய்ய மறுக்கப்பட்ட ஈஷ்வரியின் (சிரேயா ரெட்டி) காவலர்களாவர்.ஈஷ்வரியின் வற்புறுத்தலை பல முறை மறுத்த கணேஷ் ஈஷ்வரி தன்னைக் கொலை செய்ய வரும் போது திடீரென தள்ளிவிடும் பொழுது ஏற்படும் விபத்தில் மின்சாரத்தினால் தாக்கப்படும் ஈஷ்வரி பின் தனது அண்ணனிடம் தனக்கு கிடைக்காத கணேஷ் வேறொருவரையும் திருமணம் செய்யக் கூடாது எனவும் கூறிவிட்டு மரணிக்கின்றாள்.
Remove ads
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "செமத்தியாகத் தேறி வருகிறார் விஷால். டான்ஸ், ஆக்ஷன் என சண்டைக் கோழி போட்ட ஹீரோயிஸ ரூட்டுக்கு தெளிவாகப் பச்சைக் கொடி காட்டுது திமிரு. பாவாடை, தாவணி, கொடுவா பார்வை என ஷ்ரேயாவும் கூர்மையாகத் திமிர் காட்டுகிறார். ரீமாசென் இன்னும் அழகாகி இருக்கிறார். வழக்கமான கலாய்ச்சல் கேரக்டரில் ரீமாவுக்கு ஆமா போடலாம்." என்று எழுதி 39100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads