விஷால்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
விஷால் கிருஷ்ணா ரெட்டி (Vishal, பிறப்பு:29 ஆகத்து 1977)[1] தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, ஜானகி தேவி, விஷாலின் தாய் தந்தையாவர். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார்.[2][3]
Remove ads
தொழில்
கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்தியத் திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கை
விஷால் 1977 அகத்து 29 இல் பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தையும் தாயும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளர்களாக விளங்கினர். தற்போது இவரது குடும்பம் சென்னையில் வசிக்கிறது. இவர் டான் போஸ்கோ பள்ளியிலும் இலயோலா கல்லூரியிலும் பயின்றார். இவரது பேராசிரியர் ச. ராஜநாயகம் அளித்த ஊக்கத்தினால் நடிக்க வந்துள்ளார்.[4]
அரசியல்
சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெ. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அத்தொகுதி காலியாக இருந்தது. அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் 2017 திசம்பர் 21-இல் நடைபெற்றது. அதற்காக விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். விஷால் வேட்புமனுவை சரியாக பூர்த்தி செய்யாததால் இவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர்.[5]
திரைப்பட வரலாறு
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads