திம் டேவிட்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திமோதி ஹேஸ் டேவிட் (Timothy Hays David பிறப்பு 16 மார்ச் 1996) ஓர் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். [1] [2] 2022 இல் ஆத்திரேலியாவுக்காக விளையாடுவதற்கு முன்பு, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சிங்கப்பூர் தேசியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். 2022 இ20 உலகக் கிண்ணத்திற்கான ஆத்திரேலிய அணியில் இடம்பெற்றார். இவர் பல்வேறு இருபது20 அணிகளுக்காக விளையாடியுள்ளார். [3] [4] சூலை 2019 இல் சிங்கப்பூருக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார், 2022 இல் இந்தியாவுக்கு எதிரான பன்னாட்டு இ20 இல் அறிமுகமானார். [5] [6] [7] [8]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

திமோதி ஹேஸ் டேவிட், 1997 ஐசிசி கிண்ணத் தொடரில் சிங்கப்பூருக்காக விளையாடிய ராட் டேவிட்டிற்கு மகனாகச் சிங்கப்பூரில் பிறந்தார். [9] [10] இவரது குடும்பம் 1990 களில் ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தது, அங்கு இவரது தந்தை பொறியியலாளராகப் பணியாற்றினார். 1997 ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாக இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது அவர்கள் மீண்டும் ஆத்திரேலியாவுக்குச் சென்றனர், இவர் பெர்த்தில் வளர்ந்தார். [11] [12]

Remove ads

பன்னாட்டுப் போட்டிகள்

சூலை 2019 இல், 2018-19 ஐசிசி இ20 உலகக் கிண்ண ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டியின் பிராந்திய இறுதிப் போட்டிக்கு முன்னதாக சிங்கப்பூர் துடுப்பாட்ட அணிக்கான பயிற்சிக் குழுவில் டேவிட் சேர்க்கப்பட்டார். [13] அதே மாதத்தின் பிற்பகுதியில், போட்டியின் பிராந்திய இறுதிப் போட்டிக்கான சிங்கப்பூரின் இருபது20 சர்வதேச அணியில் இடம்பிடித்தார். [14] 22 சூலை 2019 இல் கத்தாருக்கு எதிராக சிங்கப்பூருக்காக பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார் [15]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads