தியூமென் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

தியூமென் மாகாணம்
Remove ads

தியூமென் மாகாணம் (Tyumen Oblast, உருசியம்: Тюменская область, தியூமென்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் தியூமென் நகரம் ஆகும். இந்நகரில் அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் தியூமென் மாகாணமே உருசியக் கூட்டமைப்பின் செவம் மிக்க மாகாணமாக இருக்கிறது. இதன் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது உருசியாவின் சராசரி தேசிய உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தைவிட கூடுதல் ஆகும்.[9] மக்கள் தொகை: 3,395,755 (2010 கணக்கெடுப்பு)[5] இந்த மாகாணம் பல மாவட்டங்களை இணைத்து ஆகஸ்டு 14, 1944 அன்று நிறுவப்பட்டது.

விரைவான உண்மைகள் தியூமென் மாகாணம்Tyumen Oblast, நாடு ...
Remove ads

புவியியல்

இந்த பகுதியில் பல வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இதன் வடக்கு பகுதியில் பாறை புறாக்கள், கடற்பசு, ஆர்க்டிக் நரி .[10] போலார் கரடிகள் போன்றவை காணப்படுகின்றன. டியூமென் பிராந்தியம் இதய வடிவத்தை ஒத்து இருப்பதாகக் கூறப்படுகிறது, இதனால் இது "ரஷ்யாவின் இதயம்" என்று சொல்வதுண்டு.

பொருளாதாரம்

தியூமென் நகரம் ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் முக்கியமான சேவை மையமாக விளங்குகிறது. இதன் சாதகமான நிலப்பரப்பு, காலநிலை காரணமாக மோட்டார், தொடர் வண்டி, நீர்போக்குவரத்து, வான் வழி போக்குவரத்து போன்றவை டியூமென் வழியாக கடந்து செல்ல வேண்டியுள்ளதால் மேற்கு சைபீரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் சேவைகளுக்கான ஒரு சிறந்த தளம் நகரமாக விளங்குகிறது. இதன் விளைவாக பல பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களான காஸ்புரோம், , லுகோயில், கேஸ்ப்ரோம்னெப்ட், டிஎன்கே-பீபி, ஷெல் (சல்யம் பெட்ரோலிய வளர்ச்சி,எனவி ) போன்றவை இங்கு தங்கள் பொறுப்பு அலுவலகங்களை அமைத்துள்ளன. டியூமெந் ஒப்லாஸ்து ரஷ்யாவின் அனைத்து பகுதிகளுக்கும் உயர்ந்த அளவிலான எரிவாயு, எண்ணெய் போனறவற்றை தயாரிக்கிறது. இதனால் பொருளாதார சமத்துவமின்மை ஏற்படுவதாக ஒரு முனுமுனுப்பு சில பகுதிகளில் நிலவுகிறது.[11]

Remove ads

மக்கள் வகைப்பாடு

இந்த பகுதியின் மக்கள் தொகை: 3,395,755 ( 2010 கணக்கெடுப்பு ); 3,264,841 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 3,080,621 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

இனக் குழுக்கள்

தியூமென் ஒப்லாஸ்து பிராந்தியத்தில் குறைந்ததுஇரண்டு ஆயிரம் பேர்வரை உள்ள ரஷ்யாவின் அங்கிகரிக்கப்பட்ட முப்பத்தி ஆறு இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். ரஷ்யாவின் இந்த பிராந்தியமே பல இனங்மக்களின் சங்கமமாக உள்ளது. இது 2010 மக்கள் கணக்கெடுப்பில் இருந்து தெரியவருகிறது.[5]

  • ரஷ்யர்கள் : 73.3%
  • தடார்கள் : 7.5%
  • உக்ரைனியர்கள் : 4.9%
  • பாஷ்கிர்கள் : 1.4%
  • அசீரியர் : 1.4%
  • நினிட்கள் : 1%
  • சுவாஷ் : 0.93%
  • காந்த்கள் : 0.9%
  • பெலாரஷ்யர்கள் : 0.8%
  • ஜேர்மனியர்கள் : 0.6%
  • கசாக்குகள் : 0.6%
  • மால்டோவர்கள்: 0.5%
  • ஆர்மேனியர்கள் : 0.5%
  • மன்சி : 0.4%
  • 5.3% மற்றவர்கள்
  • 187.803 பேர் தங்கள் இனம்த்தை குறிப்பிடாதவர்கள்.[12]

2011 ஆண்டைய புள்ளிவிபரம்:[13]

  • பிறப்பு: 55.118
  • இறப்பு: 29.261
  • பிறப்பு விகிதம்: 1000 16.25
  • இறப்பு விகிதம்: 1000 8.62

2012 ஆண்டைய புள்ளி

  • பிறப்பு: 59 668 (1000 ஒன்றுக்கு 17.2)
  • இறப்பு: 29 297 (1000 ஒன்றுக்கு 8.4) [14]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்:[15]

2009 - 1.78 | 2010 - 1.81 | 2011 - 1.83 | 2012 - 1.99 | 2013 - 2.00 | 2014 - 2.08 (இ)

Remove ads

சமயம்

2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி [19] டியூமென் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 28.9% உருசிய மரபுவழித் திருச்சபைச் சேர்ந்தவர்கள், 9% கிழக்கு மரபுவழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள், 4% பொதுவான கிருஸ்துவர் , 1% பிராட்டஸ்டண்ட் கிருத்தவர்கள் . 6% முஸ்லிம்கள் , 2% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 0.4% இந்து மதத்தினர், 34% மத ஈடுபாடு அற்றவர்கள் 11% நாத்திகர், 3.7% மத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.[16]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads