திராவிடதேசம்

From Wikipedia, the free encyclopedia

திராவிடதேசம்
Remove ads

திராவிடதேசம் தமிழர்கள் (DravidaTami Kingdom) குளிந்ததேசத்தின் தெற்பாகத்தில் ஓடும், கிருட்டிணா நதிக்கு தெற்கிலும், சோழதேசத்திற்கு வடக்கிலும்,விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம். இந்த நிலப்பரப்பை ஆண்ட மன்னர்களைப் பற்றிய விவரம் இன்றளவும் கிடைக்கவில்லை. [1]

Thumb

இருப்பிடம்

இந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேடு, பள்ளமும், காணப்படும். இந்த தேசம் வருடத்தில் 6 மாத காலம் வெப்பம் அதிகமாக இருப்பதால் இப்பூமியின் மக்கள் கருத்த நிறமுடையவர்களாக இருப்பார்கள்.[2]

மலை, காடு, விலங்குகள்

இந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகள் உண்டு. இவை பெரும்பாலும் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.

நதிகள்

இந்த திராவிடதேசத்தில் சுவர்ணமுகி நதியும், வேகவதி நதியும், க்ஷீரநதி (பாலாறு) பெண்ணையாறு, கருடநதி சேர்ந்து திராவிடதேசத்தை செழிக்க வைக்கின்றது.[3]

வேளாண்மை

இந்த திராவிடதேசத்தில் நந்தவனங்கள், ஈச்சை, நாணல், கொங்கு, பனை, பலா, புளி, இலவை, இலுப்பை, முதலிய எண்ணெய் வித்துக்கள் உள்ள மரங்களும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.

சிறப்பு

இந்த திராவிடதேசத்தின் நடுவில் திருவேங்கடமும், காஞ்சிபுரமும் சிறப்பு வாய்ந்த தலங்களாகும்.

கருவி நூல்

சான்றடைவு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads