திரிகூடராசப்பர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திரிகூடராசப்பர் அல்லது திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற இசை நாடகத்தின் ஆசிரியர் ஆவார். இயற்பெயர் ராஜப்பன்.

தோற்றம்

திரிகூடராசப்பர் தென்காசியை அடுத்துள்ள மேலகரம் என்னும் ஊரில் ஏறக்குறைய 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவராவார்.

குலம்

இவர் சைவ வேளாளர் குலம் என்றும்; திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைவராக இருந்த மறைத்திரு மேலரகம் சுப்பிரமணிய தேசிகர் சுவாமிகளின் இளவல் ஆவார்[1]

இளமை

இவர் இளம்வயதில், தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரத்திற்கு குடிபெயர்ந்தார். இவர் தம் இளம் பருவத்திலேயே தமிழ்க்கல்வி பயின்று அதில் நன்கு தேர்ச்சிப் பெற்றார்; செய்யுள் இயற்றும் திறனும் கைவரப் பெற்றார்; அவற்றுள், மடக்கு திரிபு சிலேடை முதலிய சொல்லணிகளும், உவமை முதலிய பொருளணிகளும் சிறப்பப் பாடுதலில் வல்லுநர். விரைந்து பாடும் பேராற்றலும் கொண்டவர். திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதராகிய திரிகூடராசப் பெருமான் மீது பதினான்கு நூல்கள் பாடினார்.[1]

படைத்த நூல்கள்

  1. திருக்குற்றாலக் குறவஞ்சி
  2. திருக்குற்றாலத் தலபுராணம்
  3. திருக்குற்றால மாலை
  4. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
  5. திருக்குற்றால யமக அந்தாதி
  6. திருக்குற்றால நாதர் உலா
  7. திருக்குற்றால ஊடல்
  8. திருக்குற்றாலப் பரம்பொருள் மாலை
  9. திருக்குற்றாலக் கோவை
  10. திருக்குற்றாலக் குழல்வாய்மொழி மாலை
  11. திருக்குற்றாலக் கோமளமாலை
  12. திருக்குற்றால வெண்பா அந்தாதி
  13. திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ்
  14. திருக்குற்றால நன்னகர் வெண்பா

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads