திரிசூலம் திரிசூலநாதர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரிசூலம் திரிசூலநாதர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் திரிசூலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் திருச்சுரம் என்றழைக்கப்பட்டது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக திரிசூலநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி திரிபுரசுந்தரி ஆவார். கோயிலின் மரம் மரமல்லி ஆகும். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகும். கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.[1]
அமைப்பு
மூலவர் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் உள்ளார். இறகு இல்லாத சரபேசுவரர் இக்கோயிலில் உள்ளார். தனி சன்சனதியில் மார்க்கண்டேசுவரர் 16 பட்டை லிங்க வடிவில் உள்ளார். யக்ஞோபவீத கணபதி இத்தலத்தின் கணபதி ஆவார். திருச்சுற்றில் சீனிவாசப் பெருமாள் உள்ளார். காசி விலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் உள்ளிட்டோர் உள்ளனர். இங்கு இரு அம்பிகையர் உள்ளனர். மூலவர் அருகே சொர்ணாம்பிகை உள்ளார். கோஷ்டத்தில் வீராசன தட்சிணாமூர்த்தி இடது காலைக் குத்திட்ட நிலையில் உள்ளார். அவரது சீடர்கள் பொதுவாக வணங்கிய நிலையில் இருப்பர். இங்கு சின் முத்திரையுடன் உள்ளனர். பிரம்மா தனது படைத்தல் தொழில் சிறப்பாக நடைபெறுவதற்காக லிங்கத்திருமேனியை அமைத்து அதனைச் சுற்றிலும் நான்கு வேதங்களை வைத்து பூசை செய்தார். அவை மலைகளாக மாறின. மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி சுரம் என வழங்கப்படும் நிலையில் மூலவர் திருச்சுரமுடைய நாயனார் என அழைக்கப்பட்டு பின்னர் திரிசூலநாதர் என அழைக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads