திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது. உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம்.

விரைவான உண்மைகள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர், திரிவிக்கிரமன்) திருக்கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
Remove ads

தலவரலாறு

மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.

உற்சவர் தாடாளன் வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே காட்சி தருகின்றார்.

சிறப்பு

திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது தொன்நம்பிக்கை.

திருமங்கையாழ்வார் வேல் பெற்ற திருத்தலம்

திருமங்கையாழ்வாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையேயான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால், திருமங்கையாழ்வாரைப் பாராட்டி தமது வேலை திருஞானசம்பந்தர் அளித்த திருத்தலம். திருவாழி - திருநகரி திருத்தலத்தில் இந்த வேலை வைத்தபடி திருமங்கையாழ்வார் காட்சி தருகிறார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads