திருக்குறளின் பல்வேறு பெயர்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருக்குறள் அல்லது குறள் என்று அழைக்கப்படும் நன்னெறி நூலானது அஃது எழுதப்பட்ட காலம் முதல் அறிஞர்களாலும், பொதுமக்களாலும் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டுகிறது. "முப்பால்" என்று ஆரம்பத்தில் பொதுவாகப் குறிப்பிடப்பட்டாலும் அதன் ஆசிரியராய் அறியப்படும் திருவள்ளுவர் எந்தப் பெயரையும் வைக்காமல் வாழ்க்கை நெறிகளையும் சமூக நெறிகளையும் ஈரடி கொண்ட குறளாக இயற்றியுள்ளார். இந்நூல் சுமார் 44 பெயர்களில் அழைக்கப்படுவதாகவும், சில அறிஞர்கள் மேலும் சில பெயர்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.[1][2] திருக்குறளைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவரான 19-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த அறிஞர் திரு. ஏரியல் என்பவர் இந்த நூலில் ஆசிரியர் பெயர் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Remove ads

சொற்பிறப்பியல்

'அறம்', 'பொருள்', 'இன்பம்' என மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பாடப்பட்டதால் 'முப்பால்' [3] என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. தொல்காப்பியம், தமிழ் கவிதை இலக்கியத்தைக் "குறுவெண்பாட்டு"," நெடுவெண்பாட்டு" என இரு பிரிவாகப் பிரித்துள்ளது. குறுவெண்பாட்டு என்பது குறள் பாட்டு எனவும் பின்னர்க் குறள் எனவும் அழைக்கப்பட்டது.[4] இரு அடிகளைக் கொண்ட குறளில், முதலடி நான்கு வார்த்தைகளைக் (சீர்) கொண்டதாகவும் இரண்டாம் அடி மூன்று சீர்களைக் கொண்டதாகவும் "வெண்பா" இலக்ககணத்திற்குட்பட்டதாகவும் அமைந்திருக்கும். குறளானது தமிழ்க் கவிதை வடிவங்களில் முக்கியமான ஒன்றாகும். தெய்வீகத்தன்மை காரணமாகத் திரு என்ற அடைமொழியுடன் 'திருக்குறள்' என அழைக்கப்படுகிறது. வாழ்வியல் நெறிகள், தத்துவங்கள், சிறப்புகள் எனப் பல்வேறு கருத்துகளைக் எக்காலத்திற்கும் பொருந்துமாறு குறள் கொண்டுள்ளது.

Remove ads

அடைமொழிகளின் அட்டவணை

கடந்த பல வருடங்களாக இந்நூலைப் பற்றித் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் அடைமொழிகளின் அட்டவணை.[3][5][6][7]

மேலதிகத் தகவல்கள் வரிசை எண்., பெயர் ...
Remove ads

இவற்றையும் காண்க

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads