திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில்
Remove ads

கோடீசுவரர் கோயில் என்பது திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோரால், தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரம் பாடல் பெற்ற ஒரு சிவத்தலமாகும். இவ்வூரானது வேத்ரவனம் என்று புராணகாலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் பெரிய கோயில் என்று வழங்கப்படுகிறது.[1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 37வது தலம் ஆகும்.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
Remove ads

அமைவிடம்

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில்(பூம்புகார்-கல்லணை சாலை)கதிராமங்கலத்தில் 2 கீ.மீ தொலைவிலும் திருவிடைமருதூருக்கு வடகிழக்கில் 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கோடிக்காவல் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் தலவிருட்சமாக பிரம்பும், தீர்த்தமாக சிருங்கோத்பவ தீர்த்தம் மற்றும் காவிரிநதி ஆகியவையும் உள்ளன. நவக்கிரகத் தலத்தில், சுக்கிரன் தலமான கஞ்சனூருக்குக் கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

Remove ads

இறைவன், இறைவி

இத்தலத்தின் இறைவன் கோடீஸ்வரர், இறைவி திரிபுர சுந்தரி.

கோயில் அமைப்பு

கோயிலின் உள்ளே நுழையும்போதே அழகான சிற்பங்கள் இரு புறமும் காணப்படுகின்றன. இடது புறம் அகஸ்தீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மர கணபதி, பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே சென்றால் பஞ்சமூர்த்தி அலங்கார மண்டபம், திரிபுர சுந்தரி அம்மன் சன்னதி உள்ளன. எதிரே நர்த்தன விநாயகர் உள்ளார். அம்மன் சன்னதியின் வலப்புறம் ஆடிப்பூர அம்மன் உள்ளார். இடப்புறம் பள்ளியறை உள்ளது. அடுத்து நடராஜர் சன்னதி உள்ளது. உள் மண்டபத்தில் வலப்புறம் சித்திரகுப்தரும், இடப்புறம் எமதர்மனும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வெளித்திருச்சுற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரவை நாச்சியார், சங்கிலியார், கணபதி, நாகர்,விசுவநாதர் விசாலாட்சி, ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சண்முகேசர் சன்னதிகள், கரையேற்று விநாயகர் சன்னதிகள் உள்ளன. அடுத்து ரிக்வேத லிங்கம், யஜுர் வேத லிங்கம், சாமவேத லிங்கம், அதர்வணவேத லிங்கம் உள்ளன. தொடர்ந்து கஜலட்ஜமி, ஷேத்ரபாலகர்கள், வடுக பைரவர், சூரியன், சந்திரன், நாகேஸ்வரர், சண்டபீடேஸ்வரர், கஹானேஸ்வரர் உள்ளனர். பால சனீஸ்வரர் சன்னதி தனியாக உள்ளது. கருவறை கோஷ்டத்தில் நடராஜர், சிவகாமி, கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, பிட்சாடணர், அஷ்டபுஜ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், அடுத்த சூரிய மண்டல பிரம்மா ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

பிற சிறப்புகள்

இத்தலம் மூன்று கோடி முனிவர்களால் வழிபடப்பட்டதாகும்.[1] இக்கோயில் கண்டாதித்தசோழன் மனைவி செம்பியன்மாதேவியால் கற்றளியாக்கப்பட்டது.[2]

சித்திரைத்திருவிழா

100 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைப் பெருந்திருவிழா இக்கோயிலில் கொடியேற்றத்துடன் 10 ஏப்ரல் 2019இல் தொடங்கி, நடைபெற்றது. [3]

மேற்கோள்கள்

படத்தொகுப்பு

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads