திருக்கோட்டியூர் நம்பி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கிய திருக்கோட்டியூர் நம்பி வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சிவகங்கைக்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில் குருகேசர் எனும் இயற்பெயரில் பிறந்தார். பாண்டிய மன்னனுக்கு மந்திரியாயிருந்த பெரியாழ்வருக்கு அடியவனான செல்வநம்பி வம்சத்தில் காச்யப கோத்திரத்தில் திருமாலின் புண்டரீகத்தின் அம்சமாக இவர் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. இராமானுசரின் ஐந்து ஆச்சாரியர்களில் இவரும் ஒருவர். தன் மக்களான தெற்காழ்வான் என்ற ஒரே மகனையும் தேவகிபிராட்டி எனும் ஒரே மகளையும் இராமானுசருக்கு சீடர்களாக்கியவர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
சீடர்கள்
- எம்பெருமானார் இராமானுசர்
- திருக்கச்சி நம்பிகள்
- கிடாம்பியாச்சான்,மாறநேர் நம்பி
மற்ற பெயர்கள்
- கோஷ்டி பூரணர்
- கோஷ்டி புரீசர்
- குருகேசர்
இராமானுசரும் நம்பிகளும்
ஆளவந்தாரின் ஐந்து சீடர்கள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தைப் பற்றியும் தனக்கு பின்னர் மடத்தையும் சமயத்தையும் காக்க வரும் இராமானுசருக்கு இவற்றை உபதேசிக்கவும் அறிவுறுத்தியிருந்தார். ஆயினும் தகுதியற்றவர்க்கு இதைக் கற்பிக்ககூடாது எனவும் கூறியிருந்தார் ஆளவந்தார். எனவே இவரிடம் இராமானுசர் எட்டெழுத்து மந்திரத்தின் பொருளைக் கற்க வரும் பொழுது பதினெட்டு முறைகள் மறுத்து உடையவரின் தகுதியை சோதித்தபின்னரே கற்பித்தார். மேலும் இம்மந்திரம் பரம ரகசியம் என்றும், இதை "எவருக்கும் வெளியிடக்கூடாது" என்ற நிபந்தனையின் பேரிலேயே உபதேசத்தருளினார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்டு உய்யும்படி, சாதி சமய பேதமற்று எல்லோருக்கும் உபதேசம் செய்தார் இராமானுசர். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும் என்றும் இதற்கு நரகம் புக நேரிடும் என்றும் கடிந்துக்கொண்டார். இதற்கு பதிலளிக்கும் வண்ணம் இராமானுசர் எல்லோரும் முக்தியடையவதாயின் தான் ஒருவன் நரகத்திற்குச் செல்வதும் தன்னுடைய பாக்கியமே என்றார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக்கண்டு இவரே எம்பெருமானார் என்று மகிழ்ச்சியினால் ஆலிங்கனம் செய்துக்கொண்டார். அத்தோடு வைணவ வழிபாட்டு முறைக்கு அன்றிலிருந்து எம்பெருமானார் தரிசனம் என்று அழைக்கப்படும் என்றும் அருளினார் திருக்கோட்டியூர் நம்பி.
சிறப்பு
- இராமானுசரின் ஐந்து ஆசாரியர்களில் ஒருவராய் இருந்து, ஆளவந்தார் ஆணைப்படி தானறிந்தவற்றை இராமானுசருக்கு கற்பித்தது.
- இராமானுசரின் இறைமுன் அனைவரும் சமம் எனும் கொள்கையை ஏற்காதோர், இவருக்கு நஞ்சுகலந்த அன்னத்தைப் பிச்சையிட அதனைக் குறிப்பாலுணர்ந்த இராமானுசர் அப்பொழுதிலிருந்து உணவு உண்ணாதிருந்தார். அதனைக் கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பிகள் திருவரங்கம் வந்து கிடாம்பியாச்சன் எனும் தன் சீடனை இராமானுசருக்கு உணவு சமைக்க நியமனம் செய்தருளினார்.
- இராமானுசருக்கு எம்பெருமானார் என்றும் அவர் வழிமுறைகளை பின்பற்றும் வைணவத்திற்கு எம்பெருமானார் தரிசனம் என்றும் பெயரிட்டு சிறப்பித்தது.
Remove ads
தனியன்
ஆச்சாரியரின் புகழ்பாடும் வடமொழி தனியன்:
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம்
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads