திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்map
Remove ads


திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறைதிருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்த 108 திவ்ய தேசங்களில் இருபத்தி நான்காவதாகும். [1]

விரைவான உண்மைகள் திருச்சிறுபுலியூர் தலசயன பெருமாள் கோயில், ஆள்கூறுகள்: ...

தெற்கு நோக்கி காட்சி தரும் கோயிலின் மூலவர் பெயர் ஸ்தலசயனப்பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்) – உற்சவ தாயார் பெயர் தயாநாயகி. தீர்த்தக் குளம் - மானஸ புஷக்ரிணி. விமானம் - நந்தவர்த்தன விமானம். கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாசர், வியாக்கிரபாதர், கங்கையுடன் காட்சியளிக்கிறார்.

திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட கோயில் ஆகும்.

Thumb
உற்சவர் கிருபாசமுத்திரப் பெருமாள்
Remove ads

பெயர்க் காரணம்

Thumb
மூலவர் அருட்மாக்கடல் அமுதன்

சிதம்பரம் நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர், திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.

சிறப்புகள்

Thumb
கோயிலின் உட் கோபுரம்
  1. திருமங்கை ஆழ்வாருக்காக பெருமாள் மிகச் சிறிய வடிவில் புஜங்கசயனத்தில் பள்ளி கொண்டுள்ளார். (புஜங்க சயனத்தில் மிகச் சிறிய உருவமாயிருந்ததைக் கண்டு திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட உமது குறை தீர நமது மிகப்பெரிய உருவை திருக்கண்ணமங்கையில் காணும் என்று பெருமாள் அருளிச்செய்த ஸ்தலம்) [2]
  2. கருடனுக்கு பெருமாள் அபயமளித்த இடம்.
  3. இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேடனுக்கும் சன்னதி உள்ளது.
  4. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட்ட பெருமாள் கோயில் ஆகும்.
  5. நாக தோசம் நிவர்த்திக்கும் மற்றும் மக்கட்பேற்றுக்கும் இத்தலத்திற்கு ஏற்பட்ட தனிப் பெருமை உண்டு.
  6. இத்தலத்தின் பெருமானை பூஜித்து வைகுந்தம் அடைந்த வியக்ரபாதரை, பெருமாளின் திருவடிகளுக்கு அருகிலேயே பிரதிட்டை செய்துள்ளனர்.
Remove ads

அமைப்பு

ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம், பலி பீடம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன. அடுத்து உட்கோபுரமான சிறிய கோபுரம் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், பெருமாள், விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். விஷ்வக்சேனர் உள் திருச்சுற்றில் உள்ளார். மூலவர் சன்னதி முன் வலது புறம் பள்ளியறை உள்ளது. வெளித்திருச்சுற்றில் ஆண்டாள் சன்னதி, பால அனுமார் சன்னதி, திருமாமகள் தாயார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, யாகசாலை, திருமடைப்பள்ளி, திருவாய்மொழி மண்டபம் ஆகியவை உள்ளன.

விழாக்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

படத்தொகுப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads