திருச்சிலுவை

From Wikipedia, the free encyclopedia

திருச்சிலுவை
Remove ads

திருச்சிலுவை (இலத்தீன்: cruci fixus பொருள்: சிலுவையில் இணைக்கப்பட்ட(வர்) ஆங்கிலம்: Crucifix) என்பது இயேசு கிறித்துவின் உருவம் பொதிந்துள்ள கிறித்தவ சிலுவையினைக் குறிக்கும்.[1][2] இது உடல் இல்லாத சிலுவைகளிலிருந்து வேறுபட்டது ஆகும்.

Thumb
இயேசுவின் உடலை தாங்கியுள்ள திருச்சிலுவை, இவ்வகை அருளிக்கங்கள் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம், மற்றும் லூதரனியம் ஆகிய சபைகளில் பயன்படுத்தப்படுகின்றது

பல கிறித்தவர்களுக்கு திருச்சிலுவையே கிறித்தவத்தின் அடையாளமாக உள்ளது. இவ்வகை சிலுவைகள் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம், மற்றும் லூதரனியம் ஆகிய சபைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இது இயேசுவின் சாவையும் மீட்பளித்த அவரின் பலியையும் நினைவுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கத்திய கிறித்தவத்தில் திருச்சிலுவையானது முப்பரிமானமுள்ளதாக இருப்பது வழக்கம். பொதுவாக ஈரளவு வெளி உடைய இயேசுவின் சாவினை சித்தரிக்கும் வரைபடங்கள், திருவோவியங்கள் ஆகியன திருச்சிலுவையாக கருதப்படாது. ஆயினும், கிழக்கத்திய கிறித்தவத்தில் பயன்படுத்தப்படும் திருச்சிலுவைகள் சிலுவை வடிவில் உள்ள பலகையில் மீது இயேசுவின் உருவம் வரையப்பட்டிருக்கும்.

நடுக் கால ஐரோப்பாவில் கிறித்தவ ஆலயங்களின் பீடத்திற்கு மேலே பெரிய சிலுவையினை தொங்கவிடும் வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் இப்போது இல்லை. தற்கால கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலி நிறைவேற்றும் போது பலிபீடம் அருகேயோ அல்லது அதன் மீதோ இயேசு கிறித்துவின் உருவம் பொதிந்துள்ள சிலுவை இருக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமானதாகும்.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads