திருச்சி பிரேமானந்தா

From Wikipedia, the free encyclopedia

திருச்சி பிரேமானந்தா
Remove ads

பிரேமானந்தர் (Premananda, பிரேமானந்தா, நவம்பர் 17, 1951 - பெப்ரவரி 21, 2011) என்பவர் இந்திய குருவும், தமிழ்நாட்டில் உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தை நிறுவியவரும் ஆவார். இலங்கையைச் சேர்ந்த இவர் மீது பாலியல் குற்றம், மற்றும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் சுவாமி பிரேமானந்தர்Swami Premananda, பிறப்பு ...
Thumb
பிரேமேசுவரர் கோவில்
Thumb
பிரேமானந்தரின் சமாதி
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

பிரேம்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட பிரேமானந்தா இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையின் மலையகத்தில் மாத்தளை நகரில் தனது ஆசிரமம் ஒன்றையும் அனாதை இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார். ஈழப்போரை அடுத்து இவரும் இவரது சீடர்களும் 1984 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். அவருடைய அனாதை இல்லத்தில் இருந்த சிலரையும் இவர் தன்னுடன் கூட்டிச் சென்றார்.[2]:¶4 ஆரம்பத்தில் திருச்சிராப்பள்ளியில் ஓர் இடத்தில் தனது ஆசிரமத்தை ஆரம்பித்தார். 1989 இல் பாத்திமாநகருக்கு குடிபெயர்ந்தனர்.[2]:¶4 இந்த ஆசிரமம் ஏறத்தாழ 150 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலமாகும்.[3] இந்த ஆசிரமத்தி, பல பெண்களும் சிறுவர்களும் அனாதைகளுமாக கிட்டத்தட்ட 200 பேர் வரை தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.[4] இவ்வாசிரமத்தின் கிளைகள் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஏனைய பல நாடுகளிலும் திறக்கப்பட்டன.[3][5]

Remove ads

குற்றச்சாட்டுகள்

இவர் பெண்களிடம் தகாத முறையில் நடந்ததாக 1997 ஆம் ஆண்டு எழுந்த பலத்த சர்ச்சை மற்றும் புகார்களின் அடிப்படையில், நடத்தப்பட்ட காவல் துறை புலன் விசாரணையில், குற்றங்கள் நிருபணமாகியதால், இவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் பாலியல் குற்றம், வெளிநாடுகளில் அனுமதியின்றி சொத்து குவித்தது, முதலீடு செய்தது, கொலைக்குற்றம் போன்ற பல குற்றங்களைப் புரிந்ததால் நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்து சிறையில் அடைத்தது. இவருடன் சேர்ந்து குற்றச் செயல் புரிந்த இவருடைய மாமா, பக்கிரிசாமி , மயில் வாகனம் ஆகியோரும் தண்டிக்கப்பட்டனர். பக்கிரிசாமி என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பக்கிரிசாமி 2001 ல் மரணமடைந்தார். தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இருப்பினும் உச்ச நீதிமன்றம் இவருடைய பாலியல் குற்றத்தையும், கொலைக் குற்றத்தையும் உறுதி செய்தது.

இவருக்கு ஆதரவாக வாதாடியவர் இந்தியாவின் பிரபல வழக்கறிஞரான இராம் ஜெத்மலானி[6].இவருக்கு எதிராக வாதாடி பிரேமானந்தாவுக்கு இரட்டையாயுள் தண்டனை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் கும்பகோணத்தை சேர்ந்த கீதாலயன் என்கின்ற சுகுமாரன் ஆவார். இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய பெண் நீதிபதி திருமதி பானுமதி[7]. இவர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சில ஆண்டுகளில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நீதிமன்ற சிறப்பு அனுமதியுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 21 பெப்ரவரி 2011ல் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மரணமடைந்தார்.[8]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads