ஆசிரமம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசிரமம் (ⓘ) (ashram) (சமசுகிருதம்/இந்தி: आश्रम) என்பது பொதுவாக குரு அல்லது துறவி ஒருவர் தனது ஆன்மீகத்தேடலை நாடும் குடிலைக் குறிக்கும். சீடர்களுக்கு ஆன்மீக வழிகாட்டலை தந்தமையால் குருகுலங்கள் ஆசிரமம் என அழைக்கப்பட்டன. தற்காலத்தில் தனிமையான சூழலில் இந்திய பண்பாட்டுக் கூறுகளான யோகா, அத்வைதம், செவ்வியல் இசை மற்றும் சமய சிந்தனைகளை ஆய்வு செய்யும் இடமாக குறிப்பிடப்படுகிறது. ஓர் ஆசிரமம் பொதுவாக, எப்போதுமே யல்ல, மனித நடமாட்டமற்ற வனப்பகுதிகளில் அல்லது மலைப்பகுதிகளில் இயற்கையோடு இயைந்து தியானம் செய்யுமளவில் நிசப்தமாக அமைக்கப்படுகிறது. இங்கு வாழ்வோர் வழமையாக ஆன்மீக மற்றும் உடல் பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். சில மாணாக்கர்களுக்கு தங்கி படிக்கும் பாடசாலையாகவும் விளங்குகின்றது.

Remove ads
மகாராட்டிரப் பள்ளிகள்
மகாராட்டிரத்திலும் இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் பழங்குடியினர் வாழுமிடங்களில் அமைக்கப்பட்டுள்ள தங்கிப்படிக்கும் பள்ளிகள் ஆசிரம சாலை (Ashram Shala அல்லது Ashram) என அழைக்கப்படுகின்றன. அவ்வாறான ஒரு பள்ளி லோக் பிராதாரி பிரகல்ப் ஆசிரமசாலை ஆகும்.[1][2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads