திருத்தூதர் (கிறித்தவம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தூதர் அல்லது அப்போஸ்தலர் என்னும் சொல் தூதுவர் அல்லது அனுப்பப்பட்டவர் என்னும் பொருள் கொண்ட கிரேக்க சொல்லான ἀπόστολος (அப்போஸ்டொலொஸ்) என்னும் மூல சொல்லிலிருந்து வந்ததாகும்.[1][2]. திருத்தூதர் என்னும் சொல் சீடர் (disciple) என்னும் சொல்லிலிருந்து வேறுபட்டதாகும்.[2][3]
"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார் என்னும் தகவலை மாற்கு நற்செய்தியாளர் குறித்துள்ளார் (காண்க: மாற் 1:15). கடவுளின் ஆட்சியை அறிவித்த இயேசு தம்மோடு இருப்பதற்கும் தம் பெயரால் மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கும் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தார் என்னும் தகவலை மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்தி ஆசிரியர்கள் தருகின்றனர் (காண்க: மத் 10:1-4; மாற் 3:13-19; லூக் 6:12-16).
இவ்வாறு இயேசு தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களும் இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலுக்குப்பின் உலகெங்கும் சென்று "இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார்" என்பதற்குச் சாட்சிகளாய் விளங்கி நற்செய்தி அறிவித்தனர் என்னும் செய்தியைப் புதிய ஏற்பாட்டு நூலாகிய திருத்தூதர் பணிகள் என்னும் நூல் தருகிறது (காண்: திப 1:21-22).
Remove ads
திருத்தூதர்களின் பெயர்கள்
மத்தேயு நற்செய்தி 10:2-4-இன் படி திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வரபேதுரு என்னும் சீமோன்,
- அந்திரேயா,
- செபதேயுவின் மகன் யாக்கோபு,
- யோவான்,
- பிலிப்பு,
- பர்த்தலமேயு,
- தோமா,
- மத்தேயு,
- அல்பேயுவின் மகன் யாக்கோபு,
- (யூதா) ததேயு,
- சீமோன்,
- இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.
இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்துக்கு பதிலாக மத்தியா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார் (காண்க: திப 1:15-26). பன்னிரு திருத்தூதர்கள் பட்டியலில் சேராதவராக இருந்தாலும், உயிர்த்தெழுந்த இயேசுவிடமிருந்து நேரடியான அழைப்புப் பெற்ற பவுலும் திருத்தூதர் என்றே அழைக்கப்படுகிறார். பிற இனத்தவரின் திருத்தூதர் (Apostle of the Gentiles) என்னும் சிறப்புப் பெயர் பவுலுக்கு உண்டு.
Remove ads
திருத்தூதர்களின் மரணம்
கிறித்தவப் மரபுப்படி திருத்தூதர்களின் மரணம்:
- பேதுரு என்னும் சீமோன், - தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 64.
- செபதேயுவின் மகன் யாக்கோபு - தலை கொய்யப்பட்டு இறந்தார் (கிபி 44) (மறைசாட்சியாக இறந்த முதல் திருத்தூதர்)
- செபதேயுவின் மகன் யோவான் - வயது முதிர்ந்து இறந்தார் (இயற்கை மரணம் எய்திய ஒரே திருத்தூதர்)
- அந்திரேயா - X-வடிவ சிலுவையில் அறையப்பட்டார்
- பிலிப்பு - சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 54.
- பர்த்தலமேயு, (நத்தானியேல்) - தோல் உரிக்கப்பட்டு, தலை வெட்டுண்டு இறந்தார்.
- மத்தேயு - கோடரியால் வெட்டுண்டு இறந்தார் - கிபி 60.
- தோமா, - ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தார் - கிபி 72.
- அல்பேயுவின் மகன் யாக்கோபு - சிலுவையில் அறையப்பட்டு, கல்லாலும், தடியாலும் அடியுண்டு மரித்தார்
- யூதா ததேயு, - சிலுவையில் அறையப்பட்டார்
- தீவிரவாதியாய் இருந்த சீமோன் - சிலுவையில் அறையப்பட்டார் - கிபி 74.
- யூதாசு இஸ்காரியோத்து - தற்கொலை செய்து கொண்டார்
யூதாசு இஸ்காரியோத்துக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியா, கல்லால் அடிக்கப்பட்டு, தலை வெட்டுண்டு இறந்தார்.
Remove ads
திருத்தூதர்களின் கல்லறைகள்
யூதாசு இஸ்காரியோத்தை தவிர்த்து திருத்தூதர் பதினொருவரில், எழுவரின் கல்லறைகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. அவை:
- புனித அந்திரேயா இரத்த சாட்சியான பத்திராஸ் என்னும் இடத்தில் அவரது திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.
- செபதேயுவின் மகனான புனித யாக்கோபுவின் கல்லறை, ஸ்பெயின்.
- புனித யோவானின் கல்லறை, துருக்கி
- புனித தோமாவின் கல்லறை, சென்னை சாந்தோம் தேவாலயம்
- புனித பிலிப்புவின் கல்லறை, துருக்கி
- புனித பர்த்தலமேயுவின் கல்லறை, துருக்கி.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads