திருநின்றவூர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநின்றவூர் தொடருந்து நிலையம் (Thiruninravur Railway Station) என்பது சென்னை மத்திய தொடருந்து நிலையம் - அரக்கோணம் தொடருந்து நிலையம் இவற்றுக்கிடையே உள்ள பகுதியில் உள்ள சென்னை புறநகர் இருப்பு வழியிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இந்தத் தொடருந்து நிலையமானது, திருநின்றவூரின் அருகாமைப்பகுதி மக்களுக்கு சேவையாற்றுகிறது. இந்த தொடருந்து நிலையமானது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து மேற்கு திசையில் 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் அமைவிடமானது கடல் மட்டத்திலிருந்து 37 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
1979 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று மின்மயமாக்கப்பட்டது. இந்தப் பணி சென்னை மத்திய தொடருந்து நிலையம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கான வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டபோது நிகழ்ந்தது. [1] இந்நிலையத்தில் பயணிகளுக்கான நடைப்பாலமானது பெப்ரவரி 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2]2019 ஆம் ஆண்டில் பயணிகள் முன்பதிவிற்கான புதிய சேவை முகப்பொன்று இந்நிலைய வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
தளவமைப்பு
இத்தொடருந்து நிலையம் மூன்று நடைமேடைகளைக் கொண்டுள்ளது. முதல் நடைமேடையானது நீண்ட தூர தொடருநு்துகள் மற்றும் சரக்குந்துகளுக்கானது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகள் புறநகர் போக்கவரத்திற்கான தொடருந்துகளுக்கானது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads