இந்திய இரயில்வே அமைச்சகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியத் தொடருந்து அமைச்சகம் அல்லது இந்திய இரயில்வே அமைச்சகம் (Ministry of Railways) இந்திய அரசின் ஓர் அமைச்சகமாகும். இது நாட்டின் தொடருந்துப் போக்குவரத்திற்கு பொறுப்பேற்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியத் தொடருந்துப் போக்குவரத்திற்கு ஏக உரிமையுள்ள இந்திய இரயில்வே இயங்குகிறது. இந்த அமைச்சகத்திற்கு ஆய அமைச்சர் தகுதியிலுள்ள தொடருந்து அமைச்சர் தலைமையேற்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் இரயில்வே நிதிநிலை அறிக்கையை இவர் வழங்குகிறார்.
7 சூலை 2021 முதல் இரயில்வே அமைச்சராக அஸ்வினி வைஷ்னவ் பொறுப்பில் இருக்கிறார். இணை அமைச்சராக தர்சனா ஜர்தோசு உள்ளார்.[1]
Remove ads
அமைச்சகக் கட்டமைப்பு

இரயில்வே அமைச்சரகத்தில் ஒன்றிய தொடருந்து அமைச்சரும், தொடருந்து இணை அமைச்சரும் பணியாற்றுகின்றனர். தற்போதைய இணை அமைச்சராக மனோஜ் சின்கா பொறுப்பிலுள்ளார். இந்திய இரயில்வேயின் மிக உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான இரயில்வே வாரியம் ஓர் தலைவரையும் ஐந்து வாரிய உறுப்பினர்களையும் கொண்டுள்ளது;[2] இந்த வாரியத்தில் நிதி அமைச்சகத்தின் சார்பாளராக நிதிய ஆணையர் ஒருவரும் உறுப்பினராக உள்ளார். மேலும் தலைமை இயக்குநர் (இரயில்வே சுகாதாரச் சேவை) மற்றும் தலைமை இயக்குநர் (இரயில்வே பாதுகாப்புப் படை) ஆகியோரும் இந்த வாரியத்தில் அடங்குவர். இரயில்வே வாரியம் அமைச்சரின் மேற்பார்வையில் இயங்குகிறது.
இரயில்வே அமைச்சகம் புது தில்லியிலுள்ள இரயில் பவனிலிருந்து செயல்படுகின்றது.
Remove ads
இதனையும் காண்க
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads