தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்

From Wikipedia, the free encyclopedia

தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்
Remove ads

திருநெய்த்தானம் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. சரஸ்வதி, காமதேனு, கௌதம முனிவர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 52வது சிவத்தலமாகும்.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் திருக்கோயில், பெயர் ...
Remove ads

இறைவன், இறைவி

இத்தலத்து இறைவன் நெய்யாடியப்பர். இறைவி பாலாம்பிகை.

திருவையாறு சப்தஸ்தானம்

திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.[1]

Remove ads

இவற்றையும் பார்க்க

Thumb
தில்லைஸ்தானம் பல்லக்கு, திருவையாறு சப்தஸ்தான விழா

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads