திருப்புல்லாணி
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருப்புல்லாணி இது இந்தியா , தமிழ்நாடு , இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம்,திருப்புல்லாணி உள்வட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், திருப்புல்லாணி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இங்குதான் இராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளனம் அமைந்துள்ளது. இவ்வூரின் வழியாக வைகையின் கிளையாறு கடலில் கலக்கிறது. இங்குள்ள பெருமாள் கோயிலில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் நடைபெறும் தேரோட்டம் மிகப்பிரபலம்.
Remove ads
இவ்வூரின்சிறப்பு
இங்கு அமைந்துள்ள திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.[4]
இராமாயணக் குறிப்புகள்
சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்த போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார் இராமர். தற்போது இத்திருத்தலத்தில் ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம். எனவே சீதை இல்லாமலும், லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லாமலும் ஆஞ்சநேயர் மட்டும் உள்ள திருத்தலம்.மூலஸ்தான சுவரில் இலங்கைக்கு பாலம் அமைக்க ஆலோசனை கூறிய சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads