திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில்
Remove ads

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் (அல்லது ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் கோயில்) தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[3] இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் சேதுக்கரை உள்ளது. இராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர்.[4]

விரைவான உண்மைகள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 35 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 9°16'57.7"N, 78°49'27.8"E (அதாவது, 9.282700°N, 78.824400°E) ஆகும்.

தல வரலாறு

  • புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம். இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு இராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார்.
  • சீதையை மீட்க இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்க சமுத்திர ராஜனை அழைக்க, மீன்களுக்கு இடையேயான வழக்கை தீர்த்து வைக்கச் சென்றதால், அழைப்பிற்கு உடனே வராமல் சமுத்திர ராஜன் தாமதிக்கவே, கரையில் மூன்று நாட்கள் இராமபிரான் தங்கியிருந்த திருத்தலம். தாமதமாக வந்த சமுத்திர ராஜன் காரணம் கூறி மன்னிப்பு வேண்டினார். இந்த சமுத்திரராஜன் சமுத்திரராணியுடன் சயனராமர் சன்னதியின் முன்மண்டபத்தில் அமைந்துள்ளனர்.
Remove ads

கும்பாபிஷேகம்

2017 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற திருக்கோயில்.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் ஆதிஜெகநாதப்பெருமாள், பத்மாசனி சன்னதிகளும், ஆண்டாள், தர்ப்ப சையனராமர், சந்தானகிருஷ்னர், பட்டாபிஷேகராமர் உபசன்னதிகளும் உள்ளன. இங்கு, கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளது.

பூசைகள்

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி, சித்திரை மாதம் திருக்கல்யாணம் முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 9ம் நாள் விஜயதசமி திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி, சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads