திருப்பூர் மாநகராட்சி

இந்தியாவின் தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia

திருப்பூர் மாநகராட்சி
Remove ads

திருப்பூர் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழத்தில் மேற்கு மண்டலத்தில் கொங்கு மாநிலத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தின் மாநகரத்தின் நிர்வாகத் தலைமையிடமும், 60 மாமன்ற உறுப்பினர்களைக் நான்கு மண்டலங்களையும் கொண்ட மாநகராட்சியும் ஆகும். இது 26.10.2008 அன்று நிறுவப்பட்டது. இதனை மேயர் மற்றும் துணை மேயர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளரால் நிர்வகிக்கபபடுகிறது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் கிட்டத்தட்ட 288 கோடி ரூபாய் ஆகும். இது தமிழக மாநகராட்சிகளில் அதிக வரி வருவாய் ஈட்டுவதில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

விரைவான உண்மைகள் திருப்பூர் மாநகராட்சி, வகை ...

திருப்பூர் மாநகராட்சியுடன் வேலம்பாளையம், தென் நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகன்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தணம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் தமிழ்நாடு மாநிலத்தின் மிக முக்கியமானத் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது சென்னையில் இருந்து தென்மேற்காக 448 கி.மீ [1] தொலைவில் அமந்துள்ள நகரமாகும். வேலங்கிரி மலையில் இருந்து உருவெடுக்கும் ஆறான நொய்யல் ஆறு இந்நகரின் குறுக்கே பாய்ந்து செல்வது இந்நகரின் சிறப்பம்சம்.[1][1]. இந்நகரின் பொருளாதாரம் என்பது இந்நகரைச் சுற்றியமைந்துள்ள பருத்தி பொருட்கள், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத்தயாரிப்பாளர்களை சார்ந்து அமைந்துள்ளன.

இப்பகுதியின் வெப்பமான மற்றும் வறட்சியான தட்பவெப்ப சூழல் இம்மாதிரி நிறுவனங்கள் இயங்குவதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருப்பூர் மாநகராட்சியின் மக்கள்தொகை 963,173 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 489,200, பெண்கள 473,973 ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.19% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 969 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.05%, இசுலாமியர்கள் 10.36%, கிறித்தவர்கள் 3.33% மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர்.[2]

Remove ads

மாநகராட்சி உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆணையர், மேயர் ...

திருப்பூர் மாநகராட்சி

மேலதிகத் தகவல்கள் பரப்பளவு, மக்கள் தொகை ...

மாநகராட்சி தேர்தல், 2022

2022-ஆம் ஆண்டில் மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணிக் 37 வார்டுகளையும், அதிமுக 19 வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி 2 வார்டுகளையும், சுயேச்சைகள் 2 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் மேயராக திமுகவின் என். திணேஷ் குமாரும், துணை மேயராக இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் ஆர். பாலசுப்பிரமணியனும் வெற்றி பெற்றனர்.[3]

Remove ads

திருப்பூர் மாநகராட்சியின் வார்டுகள்

  • வார்டு எண் 1 : வேலம்பாளையம் நகராட்சி (1, 20, 21) ஜூபிடர் ரோடு, சத்யா நகர், கல்யாணசுந்தரம் வீதி, பெரியதோட்டம், தியாகி குமரன் வீதி, புதுக்காலனி.
  • வார்டு எண் 2: செட்டிபாளையம் ஊராட்சி (2), காளம்பாளையம், வி.பி., சிந்தன் நகர், செட்டிபாளையம் நல்லாறு, சூர்யா நகர்.
  • வார்டு எண் 3: செட்டிபாளையம் ஊராட்சி (1) பொங்குபாளையம் வரை, டெக்மா நகர், ஈ.வெ.ரா., நகர், லட்சுமி நகர், வெங்கமேடு, ஆத்துப்பாளையம்.
  • வார்டு எண் 4: செட்டிபாளையம் ஊராட்சி (3), லட்சுமி நகர், வெங்கமேடு, தொட்டிபாளையம், கங்கா நகர், கவிதா நகர், அங்கேரிபாளையம், குப்பாயம்மன் காடு, சீனிவாசா நகர், ஓடை, சின்னச்சாமி லே-அவுட்.
  • வார்டு எண் 5: வேலம்பாளையம் நகராட்சி (2,3,4,5 வார்டுகள்),ஆத்துப்பாளையம் ரோடு, காமாட்சி காலனி, காமராஜ் காலனி, ஏ.வி.பி., ரோடு, பெரியதோட்டம், திலகர் நகர், வீரமாருதி வீதி, ராஜா பவுண்டரி வீதி.
  • வார்டு எண் 6: வேலம்பாளையம் நகராட்சி (6,7,8,9) ஏ.வி.பி., ரோடு, மாரியம்மன் கோவில் வீதி, அங்கேரிபாளையம் ரோடு, பாரதிநகர், பெரியார் காலனிமெயின் வீதி,ரிங்ரோடு, வேலம்பாளையம் ரோடு பகுதிகள்.
  • வார்டு எண் 7: செட்டிபாளையம் ஊராட்சி (4) ஸ்ரீநகர், ஸ்ரீநகர் மேற்கு, சக்தி தியேட்டர் ரோடு, ஏ.வி.பி., லே-அவுட், தீயணைப்பு தொழிலாளர் காலனி, சீனிவாசா நகர் தெற்கு.
  • வார்டு எண் 8: திருப்பூர் மாநகராட்சி (3,4) சக்தி தியேட்டர் ரோடு, பி.என்.,ரோடு, பிச்சம்பாளையம் இட்டேரி ரோடு, அங்கேரிபாளையம் ரோடு, ஆஷர்மில் லேபர் காலனி முதல் வீதி.
  • வார்டு எண் 9: திருப்பூர் மாநகராட்சி (5,8) குமரானந்தபுரம், அருள்ஜோதிபுரம் ஒன்றாவது வீதி, அண்ணா வீதி, பி.என்., ரோடு, நாவலர் நகர், ஜே.ஜி., நகர், 60 அடி ரோடு, பி.என்., ரோடு மூன்றாவது வீதி.
  • வார்டு எண் 10: திருப்பூர் (1, 2) அண்ணபூர்ணா லே-அவுட், அங்கேரிபாளையம் மெயின் ரோடு, பயர் சர்வீஸ் காலனி, அங்கேரிபாளையம் ரோடு, வலையங்காடு மெயின் ரோடு, தியாகி பழனிசாமி நகர், ஏ.பி., நகர்.
  • வார்டு எண் 11: வேலம்பாளையம் நகராட்சி (10,11,12,13) ஆந்திரா பாங்க் ரோடு, அவிநாசி ரோடு பெட்ரோல் பங்க், ஸ்டேட் பாங்க் காலனி, சாமுண்டிபுரம் மெயின் ரோடு, சண்முகா நகர், திருமலை நகர், சாமிநாதபுரம் விரிவு.
  • வார்டு எண் 12: திருப்பூர் (21) வலையங்காடு மெயின் ரோடு, சாமுண்டிபுரம் மெயின் ரோடு, எம்.ஜி.ஆர்., நகர், அவிநாசி மெயின் ரோடு, முருங்கப்பாளையம், பூந்தோட்டம், குலாம்காதர் லே-அவுட் ஐந்தாவது வீதி, வெங்கடேஸ்வரா நகர் விரிவு, பகவதி அம்மன் நகர்.
  • வார்டு எண் 13: திருப்பூர் (22)பாத்திமா நகர், சாரதா நகர், லட்சுமண கவுண்டர் லே-அவுட், இந்திரா நகர், போஸ்டர் காலனி, ஈ.ஆர்.பி., லே-அவுட், ரயில்வே லைன், சிறுபூலுவபட்டி ரிங்ரோடு.
  • வார்டு எண் 14: வேலம்பாளையம் நகராட்சி(14,15,16,17) ஜவஹர் நகர், திருமலை நகர், சண்முகா நகர், சாமுண்டிபுரம் மெயின்ரோடு, ரிங்ரோடு, வள்ளுவர் நகர், நொய்யல் ஆறு, அணைப்பாளையம், வஞ்சிபாளையம், ஆத்திக்காடு, டிஸ்ஸோ பள்ளி வீதி, லோட்டஸ் கார்டன்.
  • வார்டு எண் 15: வேலம்பாளையம் (18, 19) மூகாம்பிகை நகர், ரிங்ரோடு, வேலம்பாளையம் ரோடு, ஸ்ரீபதி நகர், ரிங் ரோடு, ஜவஹர் நகர், சொர்ணபுரி நான்காவது வீதி, லோட்டஸ் கார்டன், சோளிபாளையம் மெயின் ரோடு.
  • வார்டு எண் 16: நெருப்பெரிச்சல் ஊராட்சி (4) பண்ணாரி மாரியம்மன் நகர், பாண்டியன் நகர், பி.என்., ரோடு, ஜெயலட்சுமி நகர், நல்லப்பா நகர்.
  • வார்டு எண் 17: நெருப்பெரிச்சல் ஊராட்சி (5) ஜே.பி., நகர், சோழன்நகர், காமராஜ்நகர், கவிதா நகர், அண்ணா நகர்.
  • வார்டு எண் 18: நெருப்பெரிச்சல்(1). கணக்கம்பாளையம் ஊராட்சி எல்லை, எழில் நகர், நாடார் காலனி, கருணாம்பிகை நகர்,வாவிபாளையம்,மணியம் வி.எஸ்.எம்., கார்டன், எஸ்.குருவாயூரப்பன் நகர், சேடர்பாளையம், பாப்பநாயக்கனூர், தோட்டத்துப்பாளையம், லட்சுமி நகர், கணபதி நகர்.
  • வார்டு எண் 19: நெருப்பெரிச்சல் ஊராட்சி(2, 3) பொன்னம்மாள் நகர், அம்மன் நகர், பழனிசாமி நகர், நெட்டகட்டிபாளையம், கூலிபாளையம் ஆர்.எஸ்., உப்பிலிபாளையம், நஞ்சராயன் நகர் தெற்கு, பொம்மநாயக்கன்பாளையம், மும்மூர்த்தி நகர்,பூலுவப்பட்டி, திருமுருகன்பூண்டி ரிங் ரோடு.
  • வார்டு எண் 20: தொட்டிபாளையம் ஊராட்சி (1) பழனிசாமி நகர், நேரு நகர், திருமூர்த்தி நகர் வடக்கு, வடிவேல் நகர், சதாசிவம் நகர், அவிநாசி நகர், திருமுருகன் நகர், அத்திமரத்தோட்டம், நல்லாறு, பி.என்.,ரோடு, கங்கா நகர் மெயின் ரோடு, நந்தா நகர், கண்ணபிரான் நகர்.
  • வார்டு எண் 21: மண்ணரை (1, 2) அறிவொளி நகர், மாகாளியம்மன் கோவில் தோட்டம், சத்யா காலனி, தொட்டி மண்ணரை, ஆர்.கே.ஜி., நகர், சத்யாகாலனி, கவுண்டநாயக்கன்பாளையம், கஞ்சம்பாளையம்.
  • வார்டு எண் 22: திருப்பூர் (12) அருள்ஜோதி நகர், சின்னகவுண்டநாயக்கன்பாளையம், சக்தி நகர், பவானி நகர், காருண்யா லே-அவுட், கட்டபொம்மன் நகர், முருகசாமி லே-அவுட், தியாகி குமரன் காலனி விரிவு முதல் வீதி. முருகசாமி லே-அவுட், ரங்கநாதபுரம் விரிவு, பாப்பண்ணன் நகர், டி.எம்.எஸ்., நகர் ஐந்தாவது வீதி.
  • வார்டு எண் 23: திருப்பூர் (13, 14) அருள்ஜோதி நகர், கோல்டன் நகர், ராஜமாதா நகர் முதல், இரண்டாவது வீதி, ஜோதி நகர், வெங்கடாஜலபதி நகர், எ.எஸ்., பண்டிட் நகர், ஆர்.எஸ்., புரம், ரயில்வே லைன்,பி.பி.ஏ., காலனி, குத்தூஸ்புரம், அண்ணா நகர், கொங்கு மெயின்ரோடு, கே.ஜி.லே-அவுட், தியாகி குமரன் காலனி, ஜெயலட்சுமி நகர்.
  • வார்டு எண் 24: திருப்பூர் (10, 16, 17) சந்திரா காலனி, ஜவஹர் நகர் நான்காவது வீதி, டி.என்.கே.,புரம் மெயின் ரோடு, கொங்கு மெயின் ரோடு, ரயில்வே லைன், பேப்ரிகேஷன் ரோடு, டி.என்.கே.,புரம் வடக்கு மூன்றாவது வீதி. லட்சுமி நகர் விரிவு மெயின் ரோடு, எஸ்.வி., காலனி விரிவு மெயின் ரோடு, திருமலை நகர் தெற்கு முதலாவது வீதி, திருமலை நகர் குறுக்கு முதலாவது வீதி.
  • வார்டு எண் 25: திருப்பூர் (18, 19, 20) ஜெ.ஜி., நகர் 60 அடி ரோடு, சிட்கோ, லட்சுமி நகர், வெங்கடேசபுரம், ரயில்வே லைன், அவிநாசி ரோடு.
  • வார்டு எண் 26: திருப்பூர் (6,7,9) காட்டன் மில் ரோடு, எஸ்.வி., காலனி, ராஜாஜி நகர், இளங்கோ நகர், டி.எஸ்.ஆர்., லே-அவுட் மெயின் ரோடு, எஸ்.வி., காலனி விரிவு ஒன்பதாவது வீதி, எஸ்.வி., காலனி நான்காவது வீதி, பெருமாநல்லூர் ரோடு.
  • வார்டு எண் 27: திருப்பூர்(11,15) முருகானந்தபுரம், காட்டன் மில் ரோடு, ஜெ.பி., நகர், குமாரசாமி லே-அவுட் மெயின் ரோடு,ரங்கநாதபுரம், ராமுகாலனி, செல்வராஜா நகர், வி.ஆர்.பி., நகர், முத்துநகர் இரண்டாவது வீதி. கே.ஜி., தோட்டம், கண்ணகி நகர் முதலாவது வீதி. கொங்கு மெயின் ரோடு டி.என்.கே., புரம் மெயின் ரோடு, நீதியம்மாள் நகர்.
  • வார்டு எண் 28: தொட்டிபாளையம் ஊராட்சி (3) நல்லாறு, கஞ்சம்பாளையம், தொட்டிய மண்ணரை, கஞ்சம்பாளையம் சாலை, பாப்பா நகர், குமாரசாமி நகர், கேத்தம்பாளையம்.
  • வார்டு எண் 29: தொட்டிபாளையம் (4) நல்லாறு, பி.என்., ரோடு, சக்தி தியேட்டர் ரோடு, ஸ்ரீநகர், வ.உ.சி., நகர், கவிதா நகர்.
  • வார்டு எண் 30: தொட்டிபாளையம் (2) கங்காநகர் மெயின் ரோடு, பி.என்.,ரோடு, நல்லாறு, கேத்தம்பாளையம், குமாரசாமி நகர், கஞ்சம்பாளையம் ரோடு, பாப்பாத்தம்மன் கோவில், பி.என்.,ரோடு, கங்கா நகர், அங்கேரிபாளையம் கிழக்கு.
  • வார்டு எண் 31: திருப்பூர் மாநகராட்சி (37,38,39,40) ரயில்வே லைன், மண்ணரை தேவேந்திரன் வீதி, நொய்யல் ஆறு, குமரன் ரோடு.
  • வார்டு எண் 32: தொட்டியமண்ணரை ஊராட்சி(3) கேட்டுத்தோட்டம், பாரப்பாளையம், ஆலாங்காட்டுப்புதூர், நொய்யல் ஆறு, கஸ்பா மண்ணரை.
  • வார்டு எண் 33: நல்லூர் (1,2,15) நொய்யல் ஆறு, முதலிபாளையம், சின்னத்தோட்டம், வி.ஜி.வி., கார்டன், பொன் நகர், போயர் காலனி, மணியகாரம்பாளையம் மெயின் ரோடு, மணியகாரம்பாளையம் ஏ.டி. காலனி மேற்கு.
  • வார்டு எண் 34: நல்லூர் நகராட்சி(3,4,5) சென்னிமலைபாளையம், புதுப்பாளையம், நாச்சிபாளையம், காளிபாளையம், யாசின்பாபுநகர், குரும்பபாளையம், மருதப்பா நகர், நல்லிக்கவுண்டர் நகர்.
  • வார்டு எண் 35: முத்தணம்பாளையம் ஊராட்சி (3,4,5) சபரி பிரியா நகர், அங்காளம்மன் நகர், கண்ணன் காட்டேஜ், நல்லூர்-கோவில்வழி ரோடு, கிருஷ்ணா நகர், காங்கயம்பாளையம் ரோடு, பெருந்தொழுவு, உகாயனூர், கரைப்புதூர் ஊராட்சி எல்லைகள், எம்.புதுப்பாளையம், பிள்ளையார் நகர், கார்த்திக் நகர், பிஏபி., கால்வாய், சரஸ்வதி நகர், அய்யப்பா நகர்.
  • வார்டு எண் 36: முத்தணம்பாளையம் (1,2) வ.உ.சி., நகர், தீரன் சின்னமலை நகர், நல்லூர் ரிங் ரோடு, எம்.ஜி.ஆர்., நகர், சகஜபுரம், சி.டி.சி., காலனி, பி.ஏ.பி., கால்வாய், கிருஷ்ணா நகர், அழகாபுரி நகர், செந்தில் ரைஸ்மில் காம்பவுண்ட், கே.ஆர்.எஸ்., தோட்டம்.
  • வார்டு எண் 37: நல்லூர் நகராட்சி (6,7,12) காசிபாளையம் ரோடு, முல்லை நகர், முதலிபாளையம் எல்லை, திருநகர், பொன்சுப்பு நகர், பள்ளக்காட்டுப்புதூர், நல்லூர் ரிங் ரோடு, கே.என்.எஸ்., கார்டன், காளியப்பா நகர்.
  • வார்டு எண் 38: நல்லூர் (13,14) செந்தில் நகர், வள்ளியம்மாள் நகர் ஏழாவது வீதி, ஜெய்நகர் கிழக்கு 11வது வீதி, காங்கயம் மெயின்ரோடு, சத்தியமூர்த்தி நகர்.
  • வார்டு எண் 39: நல்லூர் (10,11) காங்கயம் நகர், ஏ.எஸ்., நகர்கிழக்கு, என்.பி., நகர், பாரதி நகர், சுப்ரமணியம் நகர், நாராயணசாமி நகர்.
  • வார்டு எண் 40: நல்லூர் (8,9) செரங்காடு முதலாவது வீதி, மாரப்பகவுண்டர் லே-அவுட், பண்ணாரி மாரியம்மன் நகர், மசிரியம்மாள் நகர், ராஜீவ்காந்தி நகர், சாஸ்திரி நகர், தாராபுரம் மெயின் ரோடு, புதூர் மெயின் ரோடு.
  • வார்டு எண் 41: திருப்பூர் மாநகராட்சி(50) தெற்கு தோட்டம், பட்டுக்கோட்டையார் நகர் விரிவு, தாராபுரம் ரோடு, வீரபாண்டி, டி.எஸ்.கே., மனைப்பிரிவு, கோபால் நகர் மூன்றாவது வீதி.
  • வார்டு எண் 42: திருப்பூர்(51, 52) வாய்க்கால் தோட்டம், தென்னம்பாளையம் புதிய காலனி, பட்டுக்கோட்டையார் நகர் மெயின்ரோடு, ஈ.பி., நகர், தென்னம்பாளையம் பள்ளி வீதி, மாகாளியம்மன் கோவில் வீதி, தென்னம்பாளையம் ஓடை, பல்லடம் ரோடு.
  • வார்டு எண் 43: திருப்பூர் (45,46,49) தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, சின்ன தோட்டம் மெயின் ரோடு, தில்லை நகர், புதூர் ரோடு, தாராபுரம் ரோடு, குறிஞ்சி நகர் விரிவு, தெற்கு தோட்டம், ஷெரீப் காலனி மெயின் ரோடு, காங்கயம் கிராஸ் ரோடு.
  • வார்டு எண் 44: திருப்பூர் (47,48) காங்கயம் ரோடு, குன்னங்கால் காடு 4வது வீதி, பாலாஜி நகர், நாராயணசாமி நகர், என்.பி.,லே-அவுட், புதூர் ரோடு, சின்னத்தோட்டம் மெயின் ரோடு, சங்கிலிப்பள்ளம் ஓடை.
  • வார்டு எண் 45: திருப்பூர்(41,42) நொய்யல் ஆறு, பூலவாரி சுகுமார் நகர் கிழக்கு, வசந்தம் நகர், காங்கயம் ரோடு, பெரியகடை வீதி, நந்தவன தோட்டம்.
  • வார்டு எண் 46: திருப்பூர்(25,27,29) ரயில்வே லைன், சூசையாபுரம், திருவள்ளுவர் தோட்டம், மங்கலம் ரோடு, வெங்கடாசல புரம், நொய்யல் ஆறு, அணைப்பாளையம் மேற்கு.
  • வார்டு எண் 47: திருப்பூர்(23,24) முருங்கப்பாளையம், அவிநாசி ரோடு, ரயில்வே லைன், திருவள்ளுவர் நகர், கே.ஆர்.இ.,லே-அவுட்.
  • வார்டு எண் 48: திருப்பூர் (26,28) ரயில்வே லைன், குமரன் ரோடு, நொய்யல் ஆறு, ராயபுரம் ரோடு, சூசையாபுரம் மேற்கு, சலவைபட்டறை வீதி.
  • வார்டு எண் 49: திருப்பூர் (33,32) நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, கள்ளிக்காடு தோட்டம், கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு, பாலக்காடு மூன்றாவது வீதி, கருவம்பாளையம் பள்ளி வீதி.
  • வார்டு எண் 50: திருப்பூர் (36,43,44) நொய்யல் ஆறு, கோவிந்தா கவுண்டர் வீதி, பெரியகடை வீதி, காங்கயம் கிராஸ் ரோடு, தாராபுரம் மெயின் ரோடு, எம்.ஜி.,புதூர் இரண்டாவது வீதி, ஜம்மனை ஓடை.
  • வார்டு எண் 51: திருப்பூர்(34,35) எம்.ஜி.,புதூர் மூன்றாவது வீதி, தாராபுரம் ரோடு, ஷெரீப் காலனி, தென்னம்பாளையம் பள்ளி வீதி, மாகாளியம்மன் கோவில் வீதி. எல்.ஆர்.ஜி., கல்லூரி, ராமலிங்கம் நகர், பூம்புகார் நகர், ஜம்மனை ஓடை.
  • வார்டு எண் 52: வீரபாண்டி ஊராட்சி(1), செல்வகணபதி நகர், சீனிவாசா நகர், பரந்தாமன் நகர், தாராபுரம் மெயின் ரோடு, வஞ்சிநகர், சபரிநகர், கருப்பகவுண்டம்பாளையம் ஓடை, வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலையம்.
  • வார்டு எண் 53: வீரபாண்டி(2) ஸ்ரீகிருஷ்ணா நகர் விரிவு, கார்த்திக் நகர், ராமாபுரம், ஸ்ரீராகவேந்திரா நகர், ராஜா நகர், ஏரி தோட்டம், சென்ட்வின், ஜீவா நகர் ஓடை, நத்தக்காட்டு தோட்டம்.
  • வார்டு எண் 54: வீரபாண்டி ஊராட்சி (3,4) சர்வோதையசங்க வளாகம், பல்லடம் மெயின் ரோடு, காலேஜ்புதூர், எல்.ஆர்.ஜி.,கல்லூரி, விக்னேஷ்வரா நகர்,நொச்சிபாளையம் பிரிவு, ஆத்தாள் தோட்டம், கோவில் தோட்டம்,கார்னர் மில்ஸ் காம்பவுண்ட்,திருவள்ளுவர் நகர், ஏ.பி., நகர், தாய்நகர், குப்பாண்டம்பாளையம் ஓடை.
  • வார்டு எண் 55: முருகம்பாளையம் ஊராட்சி (4) எல்.ஆர்.ஜி., கல்லூரி, இந்திரா நகர், பல்லடம் ரோடு மேற்கு, குப்பாண்டம்பாளையம் ஐ.ஜி., காலனி, சுண்டமேடு, கரைப்புதூர் ரோடு, ஜம்மனை ஓடை.
  • வார்டு எண் 56: திருப்பூர்(30,31) நொய்யல் ஆறு, வெங்கடாசலபுரம், ஏ.பி.டி.,ரோடு, எருக்காடு ஐந்தாவது வீதி, செல்லம்நகர் ஐந்தாவது வீதி, முருகம்பாளையம் ரோடு, முருகம்பாளையம்-பாரப்பாளையம் ரோடு.
  • வார்டு எண் 57: முருகம்பாளையம் ஊராட்சி(3) பகவதியம்மன் நகர், ஆண்டிபாளையம் ரோடு, சின்னக்கரை ஓடை, முருகம்பாளையம், கரைப்புதூர் ரோடு, அண்ணா நகர்.
  • வார்டு எண் 58: முருகம்பாளையம்(1,2) ஸ்ரீகிரீன் அவன்யூ, கார்த்திக் நகர், ஜீவா நகர், அண்ணா நகர், ஆறுமுத்தாம்பாளையம் ரோடு, இடுவாய் ரோடு.
  • வார்டு எண் 59: ஆண்டிபாளையம் ஊராட்சி(1,3), குளத்துப்புதூர், வசந்தாமணி தோட்டம், நாச்சம்மாள் காலனி, மங்கலம்ரோடு, புவனேஷ்வரி நகர், இடும்பன் நகர், சின்னியகவுண்டன்புதூர், மாநகராட்சி எல்லை.
  • வார்டு எண் 60: ஆண்டிபாளையம் (2) நொய்யல் ஆறு, முருகம்பாளையம் மெயின்ரோடு மேற்கு, செல்லம்நகர், புவனேஸ்வரி நகர், குளத்துப்புதூர் குளம்.

இவ்வாறு, வார்டு எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

Remove ads

திருப்பூர் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (TMCC)

திருப்பூர் மாநகரை நிர்வகிக்க திருப்பூர் பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. இது திருப்பூர் மாநகரின் குடிநீர், சுகாதாரம், கல்வி, பொது சேவைகள், பொது சொத்துக்கள் பராமரிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாகும். இந்த குழுமம் பெருநகரங்களில் மட்டுமே அமைக்கப்படும். அதனடிப்படையில் தமிழகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் மாநகராட்சியிலும் உள்ளது. இந்த அமைப்பு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்ற்கும் கொண்டு வர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads