திருமணம் (இந்து சமயம்)

From Wikipedia, the free encyclopedia

திருமணம் (இந்து சமயம்)
Remove ads

இந்து திருமணம் அலல்து விவாகம் (மராத்தி:லக்கணம் लग्न), தெலுங்கு:கல்யாணம் அல்லது பெல்லி) திருமணம் என்பது இந்து சமயத்தவர் செய்ய வேண்டிய 16 சடங்குகளில் ஒன்றாகும். [1]இது இந்துக்களுக்கான பாரம்பரிய திருமணச் சடங்கைக் குறிக்கிறது. 'திருமணம்' என்ற சொல்லின் நேரடிப் பொருள்: - குறிப்பாக தாங்குவது என்று பொருளாகும். இந்தியாவில் திருமணம் அக்கினி தேவன் போன்ற தேவர்களால் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது மற்றும் "அக்னியால் சாட்சியமளிக்கும் புனிதமான சங்கமம்" என்றும் கருதப்படுகிறது. திருமணம் ஒரு புனிதமாகக் கருதப்படுகிறது.[2].[3]

Thumb
தமிழர் திருமணத்திற்கு அடையாளமாக மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டும் சடங்கு
Thumb
தென்னிந்திய இந்து திருமணம்
Thumb
மணமகளை மணமகனுக்கு கன்னியாதனம் செய்யும் சடங்கு
Thumb
அக்னியை சாட்சியாக வைத்து திருமணம் செய்தல்
Thumb
அக்னியை சாட்சியாக வைத்து சப்தபதி சடங்கு செய்யும் மணமக்கள்

திருமண விழா மிகவும் வண்ணமயமானது மற்றும் பல நாட்கள் நீடிக்கும். மணமகன மற்றும் மணமகள் வீடுகள், நுழைவாயில், கதவுகள், சுவர்கள், தரை, கூரைகளில் வண்ணங்கள், பூக்கள் மற்றும் பிற அலங்காரங்களால் அலங்கரிக்கப்படுகிறது.

Remove ads

கோத்திரம்

ஒரே கோத்திரத்தில் மற்றும் ஒரே குலம் அல்லது வம்சத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது என்பது இந்து சமயத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். மேலும் சித்தி மகள்/மகனை திருமணம் செய்து கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.[4]

One should not choose (the bride) from the same gotra or born in the line of same sage. (One may choose) from (descendants of) more than seven (generations) on the paternal side and more than five (generations) on the maternal side.

Agni Purana, Chapter 154
Remove ads

திருமணச் சடங்கு

வேதங்களின்படி, திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான சங்கமம் ஆகும். இந்து திருமணத்தில் தர்மம் (கடமை), அர்த்தம் (செல்வம் மற்றும் பிற சொத்துகளைப் பெறுதல்), காமம் (பொருள் மற்றும் பிற) மற்றும் மோட்சம் (நித்திய விடுதலை) ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கான அர்ப்பணிப்பு உள்ளது.[5]

முக்கியச் சடங்குகள்

திருமணத்தின் போது செய்யப்படும் முக்கியச் சடங்குகள் பின்வருமாறு: குடும்ப மரபுகள், உள்ளூர் மரபுகள், குடும்பங்களின் வளங்கள் மற்றும் பிற காரணிகள் திருமணத்தின் போது பிரதிபலிக்கிறது. இருப்பினும் மூன்று முக்கிய சடங்குகள் திருமணத்தின் போது செய்யப்படுகிறது.

  1. கன்னியாதானம் அல்லது கன்னிகாதானம் - தந்தை தனது மகளின் கையை மணமகனிடம் ஒப்படைக்கும் முக்கிய சடங்கு. திருமணத்தின் போது தந்தையானவர் தன் மகளை, மணமகனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்னிகாதானம் ஆகும். கன்னிகாதானத்தின் போது புரோகிதர் மந்திரங்கள் ஓத நடைபெறும். கன்னியாதானத்தின் பொருள், கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் பெறுபவனின் தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானத்தை செய்கிறேன் என்பது மந்திரத்தின் அர்த்தம். மணமகனின் சம்மதம் பெற்றவுடன், மணமகளின் தாயார் நீர் விட்டு தாரை வார்க்க, தந்தையார் மணமகனின் கரங்களில் ஒப்படைப்பர். அப்போது மணமகன், பெண்ணை தானம் பெறுவார்.
  2. பாணிக்கிரஹம் - அக்னி சாட்சியாக நடைபெறும் சடங்கு. இதில் மணமகன் மணமகளின் கைகளை தாங்கிக் கொள்வர். இது மணமக்களின் சங்கமத்தின் அடையாளமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
  3. சப்தபதி - திருமணம் செய்து கொள்ளும் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டிய பின்னர், அக்னியை ஏழு முறை வலம் வரவேண்டும். புரோகிதர் வேத மந்திரங்கள் சொல்ல, ஏழு முறை அக்னியை வலம் வரும் போது, மணமக்கள் அக்னியை சாட்சியாக வைத்து ஏழு உறுதிமொழிகளைச் சொல்ல வேண்டும். அவ்வமயம் அக்னி தேவன் தம்பதியரின் ஒற்றுமைக்கு சாட்சியாகவும், ஆசீர்வாதமாகவும் விளங்குகிறார்.[6] சப்தபதி சடங்கே திருமணத்தை முழுமையாக அங்கீகரிக்கும்.[7]சமசுகிருத மொழியில் சப்த எனில் எழு; பாதம் எனில் அடி ; ஏழு அடிகள் பொருள்.
  4. நாகவல்லி சடங்கு - தெலங்கு மற்றும் சௌராஷ்டிரர் மற்றும் மாத்வ பிராமணர்கள்/தெலுங்கர்கள் செய்யும் திருமணத்தில் இடம்பெறும் சடங்கு ஆகும். மணப்பெண்ணுக்கு மஞ்சள் நூல் சேலை கட்டி, மணமகனுக்கு வேட்டி கட்டி பூணூல் அணிந்து இந்த சடங்கை செய்வார்கள்.
  5. தாலி கட்டுதல் - தமிழர் திருமணங்களில் மணமகன், மணமகளுக்கு மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் வழக்கம் நெடுங்காலமாக உள்ளது.[8]
Remove ads

திருமண வகைகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads