திருமலை சமணர் கோயில் வளாகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருமலை சமணர் கோயில் வளாகம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின், ஆரணி அருகே திருமலை எனும் குன்றில் அமைந்த திகம்பர சமண வளாகம் ஆகும். இவ்வளாகம் வேலூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.[1] பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இச்சமண வளாகம், மூன்று சமணக் குடைவரைகளும், இரண்டு சமணக் கோயில்களும் கொண்டது. பொ.ஊ. 12ம் நூற்றாண்டில், இச்சமணக் கோயிலில் தீர்த்தங்கரரான நேமிநாதரின் 16 அடி உயரச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
பொ.ஊ. 16ம் நூற்றாண்டில் இவ்வளாகத்தில் மகாவீரர் கோயில் நிறுவப்பட்டுள்ளது.
பொ.ஊ. 15–17 நூற்றாண்டுகளில் இச்சமண வளாகத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அவைகளில் சில தற்போதும் உள்ளது.
ஆரணியிலிருந்து போளூர் செல்லும் திருவண்ணாமலைச் சாலையில் இச்சமணக் கோயில் வளாகம் உள்ளது.
Remove ads
படக்காட்சிகள்
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads