திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய நடுவண் அரசு இலங்கை தமிழர் படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை வியாழன், சனவரி 15, 2009 அன்று தொடங்கினார். சென்னையை அடுத்த மறைமலை நகரில் நான்கு நாட்களாக நடத்தி வந்த உண்ணாநிலைப் போராட்டத்தை தொல். திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 18, 2009 அன்று முடித்துக் கொண்டார்[1].
வன்னிப் போரில் பெருமளவு தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து, குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி, உணவு, மருந்து, தங்குமிடம் இன்றி அகதியாகி உள்ளனர். விடுதலைப் புலிகளின் சுருங்கிய கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மிகவும் இக்கட்டான நிலையில் பட்டினிச்சாவை எதிர்நோக்கி 300 000 வரையான மக்கள் உள்ளனர். இலங்கை அரசு பொதுமக்களை சற்றும் பொருட்படுத்தாமல் மூர்க்கமாக தாக்கி வருகிறது. இப்படி "அழிவின் விளிம்பில் ஐந்து லட்சம் தமிழர்கள். இனவெறிப் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்து" என இந்திய நடுவண் அரசைக் கோரி திருமாவளவன் பட்டினிப் போரை முன்னெடுத்தார். இலங்கையின் போர் முன்னெடுப்புக்கு இந்திய அரசு படைத்துறை, பொருளாதார உதவிகளை வழங்குகியதாக கருதப்பட்டது.
Remove ads
ஆதரவு
- பாட்டாளி மக்கள் கட்சி
- திராவிடர் கழகம்
- பெரியார் திராவிடர் கழகம்
- இந்திய பொதுவுடமைக் கட்சி
- தமிழ்நாடு வணிகர் சங்கம்
- தமிழ்த் தேசிய இயக்கம்
- தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு
- இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
- பாரதிய ஜனதா கட்சி
- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
இவற்றையும் பார்க்க
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads