பெரியார் திராவிடர் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரியார் திராவிடர் கழகம் (Periyar Dravidar Kazhagam) என்பது பெரியாரின் கொள்கைகளை வலியுறுத்தும், மத எதிர்ப்பை ஆதரிக்கும் ஒரு தமிழ்நாட்டு சமூக, அரசியல் அமைப்பு ஆகும். இது 1996இல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தது.[1] இதன் தலைவர் திருவாரூர் கே. தங்கராசு மற்றும் பொதுச் செயலாளர்கள் கொளத்தூர் மணி மற்றும் விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் ஆவர்.[2][3][4] இந்திய அரசை, இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்யவேண்டாம் எனக் கோரி இந்த அமைப்பு புதுதில்லியில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியது.
Remove ads
பிளவு
ஆகத்து 2012-இல் இக்கட்சியானது இரண்டாகப் பிரிந்தது. ஒன்று கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம், மற்றொன்று கோவை இராமகிருட்டிணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவை ஆகும்.[5][6]
பெரியார் நூல் வெளியீடு
1925 முதல் 1938 வரை பெரியாரால் நடத்தப்பட்ட குடியரசு இதழில் வெளிவந்த கட்டுரைகளை 27 தொகுதிகளாக[சான்று தேவை] தொகுத்து நூல் வடிவில் சூன் 11, 2010 அன்று பெரியார் திராவிட கழகத்தாரால் வெளியிடப்பட்டது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads